காதலரை ஹீரோவாக்க காசை தண்ணியாக வாரி இறைக்கும் நடிகை
சென்னை: நடிகை ஒருவர் காதலருக்காக படம் தயாரிப்பதை பார்த்து திரையுலகினர் அவரை பாராட்டுகிறார்கள்.
முன்னணி நடிகை ஒருவர் இளம் இயக்குனர் ஒருவரை காதலித்து வருகிறார். அவரையே இந்த ஆண்டு திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர்களுக்கு ஏற்கனவே ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
நடிகைக்கு தனது காதலரை ஹீரோவாக்கிப் பார்க்கும் ஆசை வந்துள்ளது. இதையடுத்து காதலரை வைத்து படம் தயாரிக்கிறார் நடிகை. அந்த படத்தை யார் இயக்குகிறார் என்பது இன்னும் தெரியவில்லை.
காதலருக்காக நடிகை செய்யும் இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. காதல் விஷயத்தில் நடிகை காசு, பணம் பார்ப்பது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
முன்னதாக அவர் காதலித்த ஒரு பிரபலத்திற்கு அவர் கொடுத்த பரிசுகளை வைத்து மெகா பட்ஜெட் படமே எடுத்துவிடலாமாம்.
Comments


Click it and Unblock the Notifications