»   »  இம்புட்டு திமிரு ஆகாதுமா: நடிகையை பற்றி முணுமுணுக்கும் இயக்குனர்கள்

இம்புட்டு திமிரு ஆகாதுமா: நடிகையை பற்றி முணுமுணுக்கும் இயக்குனர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
இம்புட்டு திமிரு ஆகாதுமா: நடிகையை பற்றி முணுமுணுக்கும் இயக்குனர்கள்- வீடியோ

சென்னை: இம்புட்டு திமிரு ஆகாது என்று நடிகை ஒருவரை பற்றி இயக்குனர்கள் முணுமுணுக்கிறார்களாம்.

நடிப்பதுடன் நல்ல குரல் வளமும் உள்ள அந்த நடிகைக்கு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசை. அவர் நடிக்கும் படங்கள் ஓடினாலும் அவர் விரும்பும் அந்தஸ்து மட்டும் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை.

நான் நடிக்கும் படங்கள் ஹிட்டாகின்றன, விளம்பர நிகழ்ச்சிகளை நான் புறக்கணிப்பது இல்லை, படங்கள் பற்றி நல்லவிதமாக பேசுகிறேன் அப்படி இருந்தும் ஏன் எனக்கு முன்னணி நடிகை அந்தஸ்து கிடைக்கவில்லை என்று புலம்புகிறாராம் நடிகை.

நல்லாத் தான் நடிக்கிறீங்க, ஆனால் திமிர், பிடிவாதம், பந்தாவுக்கு குறைச்சலே இல்லை. முதலில் அதை எல்லாம் தூக்கிப்போட்டால் தான் முன்னணி நடிகையாக முடியும் என்று இயக்குனர்கள் முணுமுணுக்கிறார்களாம்.

இதற்கிடையே அம்மணி ஒரு கசமுசா மேட்டரில் வேறு சிக்கி அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An actress is unhappy as she is not able to reach top position in Kollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil