For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'அந்த மாதிரி படங்களா வருது.. என்னை இன்னொரு ஷகீலா ஆக்கப்பாக்குறாங்களே'.. புலம்பும் பிரபல நடிகை!

|
அந்த மாரி படம் தான் கிடைக்குது புலம்பும் நடிகைகள்

சென்னை: ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் பிரபல நடிகையை ஆபாச நடிகையாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடஇந்தியாவில் இருந்து தமிழுக்கு வந்து கலக்கியவர் அந்த நடிகை. மூத்த நடிகர்கள் முதல் டாப் ஹீரோக்கள் வரை அனைவரும் அவருடன் நடித்தனர். ஒற்றை வார்த்தையால் ரசிகர்களை கிறங்கடித்துவிடுவார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய சினிமாக்களிலும் ஒரு ரவுண்ட் வந்தார். சுமார் 15 ஆண்டுகள் கவர்ச்சிக்கன்னியாக ரசிகர்களின் கனவுகளில் வர்ணஜாலமிட்டுக் கொண்டிருந்தார் அந்த நடிகை.

கிளாமர்தான்... இருந்தாலும் க்யூட்.. டிவிட்டரை திணறடிக்கும் நடிகை!

உறவினருடன் திருமணம்

உறவினருடன் திருமணம்

மார்க்கெட் அவுட் ஆகும் நேரத்தில் தனது உறவுக்காரரையே திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே செட்டிலானார். திருமணத்திற்கு பிறகும் நடிப்புக்கு அவர் ஓய்வு கொடுக்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

செக்ஸ் காட்சிகள்

செக்ஸ் காட்சிகள்

ஆனால் நடிகை அதிக வெயிட் போட்டுவிட்டதால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் குறைந்தபட்ஜெட்டில் படம் எடுக்கும் சிலர், கவர்ச்சியை செக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முயன்றனர். இதனால் கடுப்பான நடிகை அந்த படங்களில் இருந்து விலகிவிட்டார்.

இன்னொரு ஷகீலா

இன்னொரு ஷகீலா

"கொஞ்சம் விட்டால் தன்னை ஷகீலா மாதிரி ஆக்கிவிடுவார்கள் போல தெரிகிறது. நான் கவர்ச்சி நடிகை தான். அதற்காக எல்லை மீறி நடிக்க மாட்டேன்" என தனக்கு நெருக்கமானவர்களிடம் நடிகை புலம்பி வருகிறாராம்.

நடிகையின் ஆசை

நடிகையின் ஆசை

மறைந்த அரசியல் தலைவர் ஒருவரின் சுயசரிதை படத்தில் நடிக்க நடிகை பெரிதும் ஆசைப்பட்டார். ஆனால் யாரும் அவரை சீண்டவில்லை. தனது குண்டான உடல்வாகு தான் அதற்கு காரணம் என நினைத்த நடிகை, டயட் இருந்து, உடற்பயிற்சி செய்து எடையை குறைத்திருக்கிறார்.

மெலிந்த புகைப்படங்கள்

மெலிந்த புகைப்படங்கள்

இப்போது தனது மெலிந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். எத்தனை இடிப்பு மடிப்பு அழகிகள் வந்தாலும் தங்கள் தலைவியை போல் வருமா என நடிகையின் மச்சான்ஸ் சிலாகித்து வருகிறார்கள். விரைவில் பெரிய படம் ஒன்றில் கமிட்டாவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம் நடிகை.

இப்போது தான் ஞானோதயம்

இப்போது தான் ஞானோதயம்

ஆனால் நடிகைக்கு திருமணத்திற்கு பிறகு இப்படி ஒரு ஞானோதயம் ஏற்பட்டுள்ளதே. முன்பே தனது உடல் எடையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், நிச்சயம் அவர் எதிர்பார்த்ததைவிட தமிழ் சினிமாவில் பெரிய இடத்தையே பிடித்திருப்பார்.

கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்

கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்

ஏனென்றால் நடிகையில் அறிமுகமே முன்னணி நடிகர் ஒருவரின் ஜோடியாக தான் இருந்தது. அப்போதே நடிகை சுதாரித்து சரியாக படங்களை தேர்வு செய்திருந்தால், இப்போது இப்படி புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்காது. இதெல்லாம் கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

English summary
The kollywood sources says that a former actress is so upset as everyone is trying to use her as a sex doll in their movies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more