சர்ச்சை படத்தால் சறுக்கிய நாயகி.. வட போச்சே என புலம்பல்!
கோடிகளில் சம்பளம் வாங்க வேண்டும் என்ற கனவு பொய்த்ததால் வருத்தத்தில் இருக்கிறார் வாரிசு நடிகை.
Recommended Video

சென்னை: சர்ச்சை படத்தில் நடித்ததால் தனது கனவு தவிடுபொடியாகிய வேதனையில் இருக்கிறார் வாரிசு நடிகை.
வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததால், அனைவராலும் வாயாரப் புகழப் பெற்றவர் இந்த வாரிசு நடிகை. ஆனால், அப்படத்தை தொடர்ந்து அவருக்கு அதிகம் நடிக்கும்படியான பட வாய்ப்புகள் அமையவில்லை.

கைவசம் நிறைய படங்கள் இருந்தாலும், அனைத்திலும் அழகுப் பொம்மை கதாபாத்திரம் தான் அவருக்கு அமைந்தது. ஆனாலும் முன்னணி நாயகர்கள் படம் என்பதால் அதில் நடித்தார்.
இப்படங்களின் வெற்றிகளுக்கு பின் தனது சம்பளத்தை கோடிகளில் உயர்த்திக்கொள்ளலாம் என்ற கனவில் இருந்தார் நடிகை. ஆனால் நடிகையின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டன இப்படங்கள்.
இத்திரைப்படங்கள் குறிப்பிட்ட வசூலை தந்தபோதிலும், நடிகைக்கு தனித்துவமான பெயர் கிடைக்கவில்லை. இதனால் அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளும் அழகு பொம்மை கதாபாத்திரங்களாகவே உள்ளன.
தமிழின் நம்பர் ஒன் நடிகையாகி கோடிகளில் சம்பளம் வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாததால், நடிகை வேதனையில் இருக்கிறார். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்ற நடிகையின் எண்ணம் பலிக்காமல் போய்விட்டது.


Click it and Unblock the Notifications