»   »  இதைக் கேட்டியளா...!

இதைக் கேட்டியளா...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்ம ஊர் "சமத்து" நடிகைக்கும், அந்த ஊர் "சைத்து" நடிகருக்கும் இடையிலான காதல் ரொம்ப முற்றி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வருவது பழைய செய்தி.

இப்போது புதிய செய்தி என்ன தெரியுமா.. நடிகைக்கு ஒரு புதுக் கவலை தொற்றிக் கொண்டுள்ளதாம். இந்த வாழ்க்கை இப்படியே நிலைக்குமா அல்லது பாதியிலேயே பாப் கார்ன் போல கருகிப் போய் விடுமா என்ற சந்தேகம்தான்.

நடிகையின் கவலைக்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. காரணம், சைத்து நடிகர் சற்று பிளேபாய் டைப்பாம். நிறைய நடிகைகளுடன் அவருக்கு நல்ல நட்பு உள்ளதாம். இது இப்போதும் தொடர்கிறதாம், எப்போதும் தொடரும் என்றும் நடிகர் கூறி விட்டாராம். இதுதான் நடிகையை முதுகெலும்பு வரை கவலை கொள்ளச் செய்துள்ளதாம்.

இப்படியே விட்டால் நம்மவர் நிரந்தரமாக நம்மிடம் இல்லாமல் இடையில் தாவி வேறு மரத்திற்குப் போய் விட்டால் நம்ம கதி என்னாகும் என்பதுதான் அந்த பல்லாவரம் நடிகையின் ஒஸ்தி கவலையாக இருக்கிறதாம்.

இதனால் லிவ் இன் வாழ்க்கையை அப்படியே ரெஸ்ட் ஆப் லைப் வரை தக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்துள்ளாராம். முதல் கட்டமாக விரைவில் அதிகாரப்பூர்வமாக தாலி கட்டத் தேவையான வேலைகளி்ல் குதித்துள்ளாராம்.

நல்லபடியா இருந்தா சரித்தான்.

English summary
Sources says that the famous Pallavaram actress is very upset with her boy friend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil