என்னை பார்த்தா அப்படியா தெரியுது?: கொந்தளிக்கும் நடிகை
சென்னை: முன்னணி நடிகை ஒருவரை அக்கா, அண்ணியாக நடிக்க அழைத்து அதிர வைக்கிறார்களாம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் அந்த நடிகை. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர். கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்.

நடிகைக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் நினைக்கிறார்கள். ஆனால் சரியான மாப்பிள்ளை அமையாமல் உள்ளது. நடிகையும், பெற்றோருடன் கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறார். இருப்பினும் மாப்பிள்ளை அமையவில்லை.
மாப்பிள்ளை அமையும் போது அமையட்டும் என்று அவர் படங்களில் கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் நடிகையை அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்க அழைக்கிறார்களாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த ஒரு படத்தை பார்த்தே ரசிகர்கள் அவரை ஆன்ட்டி என்று கலாய்த்தனர். இந்நிலையில் அக்கா, அண்ணி வேடங்கள் தன்னை தேடி வருவதில் நடிகை அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
எனக்கொன்றும் அக்கா, அண்ணியாக நடிக்கும் வயதாகவில்லை, அதற்கு இன்னும் காலம் இருக்கு என்று கூறி இயக்குநர்களை திருப்பி அனுப்புகிறாராம்.


Click it and Unblock the Notifications











