»   »  ரெண்டே படத்தில் ராசியில்லாத நடிகை என்று சொல்வதா? ஏக வருத்தத்தில் நடிகை!!

ரெண்டே படத்தில் ராசியில்லாத நடிகை என்று சொல்வதா? ஏக வருத்தத்தில் நடிகை!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்டைலிஷ் இயக்குநர் இயக்கத்தில் வம்பு நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானார் அந்த நடிகை. அந்த படம் தோல்வியடைந்தது. அதன் பின் திலக வாரிசுடன் ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் படுதோல்வி அடைந்தது.

நடித்த இரண்டு படங்களும் வெற்றி பெறாததால் அவர் ராசியில்லாதவர் என்று இண்டஸ்ட்ரியில் கிளப்பி விட்டுவிட்டார்களாம். இது அரசல் புரசலாக நடிகையின் காதுக்கு போயிருக்கிறது. 'ரெண்டே படத்தில் ராசியில்லாத நடிகை என்றா முத்திரை குத்துவார்கள். இரண்டிலுமே எனக்கு நல்ல பெயர் தான்... அந்த படங்கள் ஓடாததற்கு இயக்குநர்கள்தான் காரணம்' என்று பதில் அளிக்கிறாராம்.

Actress vexed after heard failure sentiment talks

ஆனால் ஒரு நல்ல கதையுள்ள படத்தில் வாய்ப்புக் கிடைத்தும், ஓரிரு காட்சிகளில் கர்ப்பிணி வேடம் என்பதால் நடிக்க மறுத்தவர்தானே நடிகை... தேவைதான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

நடிகை இப்போது அரசியல் வாரிசுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.

English summary
Stylish director - vambu actor combo fame actress has slammed persons those are talking about her failure sentiment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil