ஹீரோ அளவு சம்பளம் கேட்கும் நடிகை: பிரமாண்ட இயக்குனரை திட்டும் தயாரிப்பாளர்கள்

By Siva

மும்பை: நடிகை ஒருவர் ஓவராக சம்பளம் கேட்பதை பார்த்து தயாரிப்பாளர்கள் பிரமாண்ட இயக்குனரை திட்டுகிறார்களாம்.

பிரமாண்ட இயக்குனர் உயர்ந்த நடிகை ஒருவரை தன் படங்களில் திரும்பத் திரும்ப நடிக்க வைத்து வெற்றி நடிகையாக்கிவிட்டார். அவர் இயக்கத்தில் நடித்த படத்திற்கு பிறகு நடிகை புதுப்படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

இந்நிலையில் நடிகை தானே தயாரித்து ஒரு படத்தில் நடிக்கிறார்.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

நடிகையை தங்களின் படங்களில் ஒப்பந்தம் செய்ய செல்லும் தயாரிப்பாளர்களிடம் ஹீரோவுக்கு என்ன சம்பளமோ அதே தான் எனக்கும் வேண்டும் என்கிறாராம் நடிகை. நான் ஹீரோவுக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை. அதனால் சம்பளத்தை குறைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கறாராக கூறுகிறாராம் நடிகை.

பணம்

பணம்

தேவையில்லாமல் இந்த நடிகை கேட்ட பணத்தை கொடுத்ததால் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டு ஹீரோ வாங்கும் அதே சம்பளத்தை கேட்கிறார் என்று பிரமாண்ட இயக்குனரை தயாரிப்பாளர்கள் கழுவிக் கழுவி ஊத்துகிறார்களாம்.

நடிகை

நடிகை

இயக்குனர் ஒருவர் அந்த நடிகையை சந்தித்து கதை சொல்ல அவருக்கு பிடித்துவிட்டதாம். ஆனால் அவர் சொன்ன சம்பளத் தொகையை கேட்டு இயக்குனருக்கு தலை சுற்றி அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டாராம். என் உழைப்புக்கு ஏற்ற பணம் கொடுக்காவிட்டால் அந்த படத்தில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் நடிகை.

ஹீரோ

ஹீரோ

நான் ஹீரோவுக்கு குறைவாக ஒன்றும் உழைக்கவில்லை. அப்படி இருக்கும் போது ஹீரோவுக்கு மட்டும் எதற்காக என்னை விட அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். அப்படி குறைந்த சம்பளத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X