நடிகரோடு நெருக்கமா?.. நடிகைக்கு வீட்டில் செம்ம ரெய்டு.. கையெடுத்து கும்பிட்ட காதலன்.. ஒரே பேஜார்
சென்னை: இந்த நடிகை இன்னும் தமிழ் சினிமாவில் நேரடியாக அறிமுகம் ஆகவில்லை என்றாலும் நடிகைக்கு தமிழ் சினிமா உலகில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தெலுங்கில் இவர் நடித்த படம் நடிகைக்கு இந்திய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. அப்படி இருக்கையில் நடிகை சமீபத்தில் பான் இந்தியா ஸ்டாராக வளர்ந்து நிற்கும் நடிகருடன் காதலில் இருக்கிறார் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று எல்லாம் கிசுகிசுக்கள் அதிகரித்து வருகிறது.
அதாவது நடிகைக்கும் நடிகையோடு சம்பந்தப்படுத்தப்பட்டு கிசுகிசுக்கப்படும் நடிகருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் நடிகைக்கு நடிகர் மீது தனி மரியாதையே உள்ளது. காரணம் தென்னிந்திய சினிமாவில் இருந்து தனது கெரியரை தொடங்கி இன்றைக்கு இந்திய சினிமாவே கவனிக்கும் இடத்திற்கு வளர்ந்துள்ளார். அப்படி இருக்கும்போது நடிகைக்கு நடிகர் என்றால் தொழில் பக்தி இருப்பது போல மரியாதை இருக்கிறதாம்.

நெருக்கடி: இப்படி இருக்கையில் சில நிகழ்ச்சிகளில் இருவரும் சந்தித்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்த சிலர் தான் இது போல காதலிக்கிறார்கள், டேட் செய்கிறார்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று எல்லாம் புரளியை கிளப்பி விட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்ற பேச்சுக்களும் உள்ளது. இந்த புரளிகளால் நடிகைக்கு இரண்டு தரப்பில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஒன்று நடிகை சினிமாவிற்குள் காலடி எடுத்து வைக்கிறேன் என்று வீட்டில் சொன்னதும் எக்காரணம் கொண்டும் ஒரு நடிகரைத் தான் திருமணம் செய்வேன் என்று எங்கள் முன் வந்து நிற்க கூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டுத்தான் அனுமதித்தார்களாம். அப்படி இருக்கும்போது இந்த கிசுகிசுக்கள் நடிகையின் வீட்டில் நடிகைக்கு செம்ம ரெய்டு விழ காரணமாக இருந்துள்ளது. மற்றொரு புறம் நடிகையின் காதலன் இது போன்ற கிசுகிசுக்களை சுத்தமாக விரும்பவில்லையாம். இப்படி இருக்கும்போது தனது வீட்டில் எதிர்காலத்தில் தங்களது காதல் குறித்து பேசும் போது, இந்த கிசுகிசுக்கள் பிரச்னையாக வந்துவிடும் என்பதால் கையெடுத்து கும்பிட்டு, அடுத்த சில ஆண்டுகளுக்கு அந்த நடிகருடன் எந்த படத்திலும் கமிட் ஆக வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளாராம். யாரோ கிளப்பிவிட்ட கிசுகிசுவால் நடிகைக்கு இப்போது பெரிய தலைவலியே ஏற்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











