எல்லாமே காதலருக்காக... எலும்பும் தோலுமாக மாறிய வாரிசு நடிகை.. ஆனால்.. விஷயமே வேற !
சென்னை : பிரபல நடிகரின் வாரிசு தனது காதலருக்காக செய்துள்ள தியாகம் குறித்து சினிமா வட்டாரத்தில் முனுமுனுக்கப்பட்டு வருகிறது.
பிரபல நடிகரின் வாரிசான அந்த நடிகை, மாடலிங், இசையமைப்பதுமாக இருந்தார் . இதையடுத்து, பிரபல இயக்குநர் ஒருவரின் படத்தில் திடீரென நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல்படத்திலேயே முன்னணி நடிகருடன் ஜோடிபோட்டு நடித்திருந்தார். அந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வாரிசு நடிகைக்கு நல்ல பெயரும் கிடைத்தது.

ஒல்லி நடிகருடன்
முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஏராளமான படங்களில் நடிக்கும் வாய்ப்பு நடிகையின் வீட்டு வாசல் கதவை தட்டின. இதையடுத்து, பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார். மேலும், ஒல்லி நடிகருடன் ஒரு படத்தில் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

ஓவர் கெமிஸ்டிரி
அந்த படத்தில், ஒல்லி நடிகருடன் கெமிஸ்டிரி ஓவராக ஒர்க்கவுட்டாக வாரிசு நடிகையும், ஒல்லி நடிகரும் டேட்டிங் வரை சென்றனர். அதை உறுதிப்படுத்துவது போல நடிகையும் அந்த பிரபலமும் சமூக வலைதளங்களில் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். இதுகோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

எலும்பும் தோலுமாகா
டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நடிகைக்கு திடீரென படவாய்ப்பு குறைந்ததால், பாலிவுட் பக்கம் ஓட்டம் எடுத்தார் அங்கும் அவருக்கு படவாய்ப்பு இல்லாதால் என்ன செய்வது என்று தெரியாமல் காதலருடன் , ஊர் சுற்றி வருகிறார். திடீரென உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமானார். இதுஎல்லாமே பாலிவுட் படவாய்ப்புக்காகத்தான் என ரசிகர்கள் நினைத்து வந்தனர்.

வாயை கட்டி, வயிற்றைக்கட்டி
ஆனால், நடிகை திடீரென எடையை குறைத்து ஒல்லியாக மாறியதற்கு காரணம் காதலரின் ஆர்டராம். கொழுக்மொழுக் என்றிருந்ததால் அக்கா போல இருப்பதாக காதலன் கூற, தனது தெய்வீகமான காதலுக்காக வாயை கட்டி, வயிற்றைக்கட்டி பல தியாகங்களை செய்து அந்த வாரிசு நடிகை காதலனுக்கு ஏற்ற ஜோடியாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பலர் இந்த காதல் எத்தனை நாளைக்கோ என ரகசியமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











