தவளை தன் வாயால் கெட்ட கதையாக மாறிடுச்சே.. இரண்டாவது காதலுக்கே வேட்டு வைத்த நடிகையின் பேச்சு!
சென்னை: வாரிசு நடிகையின் வாய் அவருக்கே வினையாக மாறி உள்ளது. ஏகப்பட்ட தோல்வி படங்களை கொடுத்தாலும், நடிகரின் முகத்துக்காக அவரது மகளுக்கு இன்னமும் சில பிரபலங்கள் அவரை ஹீரோயின் ஆக்கி வருகின்றனர்.
ஆனால், அதற்கு எல்லாம் ஒட்டுமொத்தமாக வேட்டு வைக்கும் விதமாக சமீபத்தி நடிகை தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டார்.
வெளிப்படையாக பேசுகிறேன் என்கிற நினைப்பில் அவர் பேசியது, அவரது பட வாய்ப்புகளையும் தாண்டி சொந்த வாழ்க்கையிலும் பெரிய புயலையே வீசி விட்டதாம்.

வாரிசு நடிகை
அந்த பிரபல ஜாம்பவான் நடிகரின் மகள் தான் அந்த வாரிசு நடிகை. மனைவியை பிரிந்து வாழ்ந்தாலும், மகள்களுக்கு நல்ல தகப்பனாக இருக்க வேண்டும் என தன்னால் முடிந்தவற்றை செய்து வந்தார் அந்த நடிகர். பிரபல நடிகரின் வாரிசு என்பதால், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல திரையுலகில் முன்னணி நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஃபேஸ் சரியில்லை என்றும் வாய்ஸ் சரியில்லை என்றும் ட்ரோல் செய்யப்பட்டாலும், தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது.

முதல் காதல் தோல்வி
சர்ச்சை நடிகர் மற்றும் ஒல்லி நடிகருடன் ஒட்டி உராசி வந்த நடிகை அவர்கள் இருவரும் கழட்டி விட்ட நிலையில், வெளிநாட்டு ஏமாளியை காதலராக மடக்கி விட்டார். அப்பாவுக்கு எல்லாம் அறிமுகம் செய்து வைத்த நிலையில், கடைசி நேரத்தில் விசா முடிந்ததும், நடிகைக்கு குட்பை சொல்லிவிட்டு அந்த காதலர் ஓடியே போய் விட்டார். இப்படியொரு நடிகையை விட்டு அவர் ஓடிப் போக என்ன காரணம் என்று புரியாமலே இன்னொரு காதலர் நடிகையின் வலைக்குள் வந்து விழுந்துள்ளார்.

அடுத்த ஆடு
நடிகையின் அழகை பார்த்து மயங்கி அடுத்த ஆடாக அவரது வலையில் சிக்கிய நபருக்கும் அந்த விஷயத்தில் நடிகை இடம் கொடுக்காமலே இருந்து வந்துள்ளாராம். திருமணத்துக்கு பிறகு தான் மற்ற விஷயங்கள் என சொல்லி வந்த நிலையில், தற்போது தெரியாத்தனமாக தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு உதாரணமாக மாறி விட்டார் அந்த நடிகை.

தவளை தன் வாயால் கெடும்
சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனக்கு அப்படியொரு பிரச்சனை இருப்பதை பப்ளிக்காக சொன்ன நிலையில், தற்போது அந்த நடிகையின் தலைமீது இடியே வந்து விழுந்து விட்டதாம். நடிகையை புக் செய்த தயாரிப்பாளர்கள் எல்லாம் அய்யய்யோ அந்த நடிகை வேண்டாம்ப்பா.. உடம்பு முடியாதவரை ஏன் கஷ்டப்படுத்தணும் என கூலாக சொல்லி அட்வான்ஸை திரும்ப வாங்க போன் போட்டு வருகிறார்களாம்.

கம்பி நீட்டும் காதலர்
நடிகையின் நல்ல மனது பிடித்துப் போன நிலையிலேயே அவரை காதலித்து வாழ்க்கை தரலாம் என நினைத்துக் கொண்டிருந்த அந்த இரண்டாவது காதலருக்கும் அவரது குடும்பத்தில் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வர ஆரம்பித்து இருக்கிறதாம். அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் ஏதோ துக்கம் விசாரிப்பது போல விசாரித்து வருவதாக பரவலாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. மேலும், நடிகையை விட்டு வந்துவிடு என்றும் அட்வைஸ் செய்து வருகிறார்களாம். இந்த காதலரும் இந்த காரணத்தால் கம்பி நீட்டிவிடுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











