இந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்

சென்னை: அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி வெகு சீக்கிரமே ரசிகர்களை டார்ச்சர் பண்ண ஒளிபரப்பாக உள்ளது.

நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என மறுத்த அந்த நடிகை திடீரென மீடியா வெளிச்சம் அடைவதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மங்களகரமான அந்த நடிகை காசு வாங்கிக் கொண்டு இப்படி நெகட்டிவ் பப்ளிசிட்டி பண்ணி வருகிறாராம்.

பரப்பிய வதந்தி

பரப்பிய வதந்தி

இது பரவிய வதந்தி இல்லங்க, திட்டம் போட்டு பரப்பிய வதந்தி தானாம். அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி என்ற பேர் வழியில் சர்ச்சைகளை கிளப்பி குளிர் காயும் அந்த நிகழ்ச்சியில், அந்த மங்களகரமான நடிகை கலந்து கொள்கிறார் என வெளியான வதந்தி, அந்த நிகழ்ச்சியின் நெகட்டிவ் பப்ளிசிட்டி குழு திட்டமிட்டே செய்து ஏற்பாடு தான் என்கிற திடுக் தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்பார்ப்பை எகிற வைக்க

எதிர்பார்ப்பை எகிற வைக்க

ரியல் போட்டியாளர்கள் மற்றும் ரீல் போட்டியாளர்கள் லிஸ்ட் என இரண்டு பட்டியல்களை வைத்துக் கொண்டு அந்த இரண்டையும் கலந்து சமூக வலைதளத்தில் கசியவிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைக்க தனியாக ஒரு குழுவையே அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் வைத்துள்ளாராம்.

திட்டம் போட்டு

திட்டம் போட்டு

சமீபத்தில், கூடி பேசிய அவர்கள், ஏற்கனவே பண்ண பல சர்ச்சைகள் சரியாக வொர்க்கவுட் ஆகி பில்டப்பை பக்காவாக கிளப்பி இருக்கிறது. இப்போதைக்கு கடைசி நேரம் என்பதால், பெரிய அளவில் நெகட்டிவ் பப்ளிசிட்டி தேவைப்படுகிறது. அதிலும், அந்த நடிகை பேசினாலே பற்றி எரிகிறது. அவரை வைத்தே இந்த கடைசி பில்டப்பை செய்து விடலாம் என அந்த நிகழ்ச்சி குழு திட்டம் போட்டு நடத்தி வரும் நாடகம் தான் இதுவாம்.

காசு வாங்கிக் கொண்டு

காசு வாங்கிக் கொண்டு

முன்னதாக தானும் ஒரு போட்டியாளராக நுழையலாம் என்று நினைத்த அந்த நடிகையை வைத்து கடைசி நேரத்தில் இப்படியொரு கேம் ஆடி வருகின்றனர் நிகழ்ச்சியை நடத்துபவர்கள். காசு வாங்கிக் கொண்டு இப்படி நடிப்பதற்கு பதிலாக வேறு பொழப்பை பார்க்கலாம் என தகவல் தெரிந்த கோலிவுட் வாசிகள் திட்டித் தீர்க்க ஆரம்பித்துள்ளனர்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

பெரிய தொகை மட்டுமின்றி பட வாய்ப்பையும் பெற்று தருவதாக நிகழ்ச்சியை நடத்துபவர்கள் ஒப்பந்தம் போட்ட நிலையில் தான் அந்த மார்க்கெட் இழந்த நடிகை இப்படி தொடர்ந்து ரவுண்ட்டு கட்டி வாங்கிய காசுக்கு அதிகமாவே கூறி வருகிறாராம். இது வரை அமைதியாக இருந்த அவர், இப்போ வைரல் ஆகிறார் என்றால் எல்லாமே ஒரு விளம்பரம் தான் பாஸ் என்கின்றனர்.

டேமேஜ் பண்ணாலும் பேசணும்

டேமேஜ் பண்ணாலும் பேசணும்

அந்த சர்ச்சை நிகழ்ச்சியின் அடி நாதமே ரசிகர்கள், நெட்டிசன்கள் எவ்வளவுக்கு எவ்வளவு டேமேஜ் பண்றாங்களோ அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கல்லா கட்டுவார்கள். இப்படி நெகட்டிவ் பப்ளிசிட்டியை பண்ணித் தான் அந்த நிகழ்ச்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் கொடி கட்டிப் பறக்கிறதாம்.

More from Filmibeat

Read more about: gossip kollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X