இயக்குநருடன் நெருக்கம்.. பாலிவுட் ஆசையால் எல்லை மீறிய நடிகை !
சென்னை : பாலிவுட் ஆசையால் பிரபல நடிகை இயக்குநருடன் மிகவும் நெருக்கமாக ஆட்டம் போட்டுள்ளது பாலிவுட்டில் மிகவும் பேசு பொருளாகி உள்ளது.
கோலிவுட், டோலிவுட் என பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் கணிசமான படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அந்த நடிகைக்கு எப்படியாவது டாப் நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசையில் இப்படி எல்லைமீறி நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

ராசி இல்லாத நடிகை
கோலிவுட்டில் நீண்ட நாட்களுக்கு முன்பே சினிமாவில் என்ட்ரியானவர்தான் இந்த பூ நடிகை. நல்ல உடல் அமைப்பு, லட்சணமாக முகம் இருந்த போதும் இவர் அறிமுகமான முதல் படமே தோல்வியைத் தழுவியதால் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்தால், மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு டோலிவுட் பக்கம் சென்றார்.

பட வாய்ப்பு குவிந்தது
டோலிவுட்டில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அம்மணி ஓரளவுக்கு நிம்மதி அடைந்தார். இதையடுத்து டோலிவுட் பிரபல நடிகருடன் பூ நடிகை போட்ட ஆட்டம் வேறலெவில் டிராண்டானதால், உலகமே கொண்டாடும் நடிகையாக மாறினார். இதையடுத்து, பூ நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

ஆசை நிறைவேறவில்லை
கோலிவுட்டில் என்ட்ரியாக இதுதான் சரியான நேரம் என்பதால், மீண்டும் தமிழில் பிரபல நடிகரின் படத்தில் என்ட்ரியானார். அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால், படம் வெளியானது. ரசிகர்கள் அந்த படத்தை கடுமையாக விமர்சித்தனர். எப்படியும் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறாததால் அந்த நடிகை அப்செட்டில் இருக்கிறார்.

பாலிவுட் ஆசை
சரி கோலிவுட் கனவு தான் நிறைவேறவில்லை, பாலிவுட் ஆசையும் காணல் நீராகிவிடுமோ என்ற பயத்தில், பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கொடுத்த பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்டு அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார் . அந்த இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட திரைபிரபலங்கள் பலர் அந்த பூ நடிகையின் நடவடிக்கையை பார்த்து வசைபாடி உள்ளனர். அந்த இயக்குநருடன் இவ்வளவு நெருக்கமாக இருக்க பாலிவுட் ஆசை தான் காரணம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











