10 வருஷமா குழந்தை இல்லை.. தத்தெடுக்க மனசு வராத நடிகை.. அந்த நடிகருக்கு தினமும் டார்ச்சராம்?

சென்னை: காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகைக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் குழந்தை பாக்கியமே இல்லாத நிலையில், ரொம்பவே மன உளைச்சலில் இருந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. குழந்தை இனியும் பிறக்காது என்கிற முடிவுக்கே நடிகர் வந்த நிலையிலும், மனைவி நடிகை விடாமல் அவரை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

சினிமாவில் சில நடிகைகள் சரியான காலத்தில் திருமணம் செய்துக் கொண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால், ஒரு சில நடிகைகளோ திருமணமே செய்துக் கொள்ளாமல், அப்படியே தொடர்ந்து கனவுக்கன்னியாக ஒன்லி பீஸாக இருக்க விரும்புவார்கள்.

Actress wife tortures husband after no heir for 10 years

சில நடிகைகள் திருமணம் செய்துக் கொண்டாலும், இளமையில் செய்த சில பல விஷயங்கள் காரணமாக குழந்தை பெறமுடியாத சூழலில் தவிக்க நேரிடுகிறது. ஒருசில நடிகைகள் குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொண்டும் ஒரு சிலர் தத்தெடுத்தும் வளர்ப்பதை கடை பிடித்து வருகின்றனர். ஆனால், இதில், எந்த வகையிலும் சேராத ஒரு சில பிரபலங்களும் சினிமா உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.

உண்மையான காதல்: ஆரம்ப காலத்தில் அந்த நடிகருடன் இணைந்து நடித்த போதே நடிகைக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது. சில ஆண்டுகள் இருவரும் ரொம்பவே உண்மையாக ஒருவருக்கொருவர் நேசித்த நிலையில், திருமணமும் செய்துக் கொண்டனர். ஆனால், திருமணத்துக்குப் பிறகு இருவரும் சில ஆண்டுகளை தவிர பெரிதாக சந்தோஷமாக வாழவில்லை என்றும் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வது கூட கிடையாது என்று பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சினிமாவில் பிசி: குழந்தை பிறக்காத விரக்தியால் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள ஆரம்பித்து, தற்போது இருவரும் சினிமாவில் ரொம்பவே பிசியாக நடித்து வருவதை மட்டுமே பிரியாரிட்டி கொடுத்து வருவதாகவும், இருவரும் இணைந்து பேசினாலே குழந்தை டாபிக் எழுந்து சண்டையை உருவாக்குகிறது என்கின்றனர்.

மனைவிக்கு மனசு வரல: 10 ஆண்டுகள் ஆன நிலையில், இதற்கு மேல் வைத்தியம் பார்த்து எல்லாம் குழந்தை பெத்துக்க வாய்ப்பே இல்லை என்கிற முடிவுக்கே நடிகர் வந்துவிட்டாராம். ஆனால், மனைவிக்கு வேறு ஒருவருடைய குழந்தையை தத்தெடுத்து வளர்க்க கொஞ்சம் கூட மனசே இல்லாத நிலையில் தான் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

தொடர்ந்து டார்ச்சர்: பெரிய பெரிய மருத்துவர்களிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி வைத்துக் கொண்டு அவர்களை போய் சந்திக்க சொல்லி வருகிறாராம் மனைவி நடிகை. சினிமா ஷூட்டிங்கில் பிசியாக உள்ளேன் என்றும் கன்சல்டிங்கை தவிர்க்க காரணங்களை சொல்ல நடிகை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார் என்கின்றனர். இருவரும் இந்த விஷயத்தில் கலந்து பேசி ஒரு முடிவை எட்டினால் மட்டுமே அவர்களது வாழ்க்கை பழையபடி காதலுடன் சந்தோஷமாக இருக்கும் என்றும் இல்லையென்றால் சீக்கிரமே இருவரும் நிரந்தரமாக பிரிய வேண்டிய சூழலே உருவாகி இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் அதிர்ச்சியை கிளப்பி உள்ளன. என்னதான் இருந்தாலும், தனது மனைவியை விட்டுப் பிரிந்துவிடக் கூடாது என்பதில் நடிகர் உறுதியாக இருப்பதே இத்தனை வருடங்களாக இருவரும் இணைந்து வாழக் காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X