எங்க கிட்ட இல்லாதது அந்த நடிகையிடம் அப்படி என்ன இருக்கு?: கடுப்பில் சக நடிகைகள்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகையை பார்த்து சக நடிகைகள் கடுப்பில் உள்ளார்களாம்.
பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் ஹாலிவுட் பக்கம் சென்று வெற்றியும் கண்டுள்ளார். அவரை அடுத்து ஹாலிவுட் சென்ற பாலிவுட் நடிகையால் அங்கு ஜொலிக்க முடியாமல் திரும்பி வந்துவிட்டார்.
இந்நிலையில் ஹாலிவுட்டில் கலக்கும் அந்த நடிகை விருது விழா ஒன்றில் வெறும் 5 நிமிடம் ஆட ரூ. 5 கோடி வாங்கியிருக்கிறார். அவள் கேட்டால் மட்டும் 5 நிமிஷத்திற்கு ரூ. 5 கோடியா என்று சக நடிகைகள் கடுப்பில் உள்ளார்களாம்.
நாங்களும் அதே டான்ஸை தான் ஆடுகிறோம் ஆனால் எங்களுக்கு யாரும் இந்த அளவுக்கு கொட்டிக் கொடுக்கவில்லையே. அவளிடம் அப்படி என்ன ஸ்பெஷல் என்று சக நடிகைகள் வயித்தெரிச்சலில் பல்லை கடிக்கிறார்களாம்.
இதை எல்லாம் கேள்விப்பட்டு அந்த நடிகை கூலாக சிரிக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











