அந்த நடிகரின் தங்கச்சியாக நடித்தால் கெரியர் காலி: பயப்படும் நடிகைகள்

By Siva

சென்னை: பிரபல நடிகரின் தங்கையாக நடிக்கும் நடிகைகளின் கெரியர் படுத்து தூங்கிவிடுகிறது.

தங்கை பாசம் அதிகம் உள்ள பிரபல நடிகரின் படத்தில் அவருக்கு தங்கையாக நடிப்பவர்களின் கெரியர் முடிந்துவிடுகிறது. அவருடன் சேர்ந்து தங்கையாக நடித்து பிரபலமான நடிகைகள் தற்போது காணாமல் போய்விட்டனர்.

அவருடன் தங்கையாக நடித்து தற்போது அல்லாடும் நடிகை ஒருவர் ஏன்டா அவருடன் நடித்தோம் என்று ஃபீல் பண்ணுகிறார்.

ஹீரோயின்

ஹீரோயின்

நடிகரின் தங்கையாக நடித்தவர்களில் ஒருவருக்கு கோலிவுட்டில் ஹீரோயினாக ஒரு ரவுண்டு வர ஆசை. ஆனால் அனைவரும் அவரை தங்கச்சி நடிகையாகவே பார்ப்பதால் பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.

காணாமல் போனார்

காணாமல் போனார்

அந்த நடிகரை அண்ணன் அண்ணன் என்று பாசமாக அழைத்து நடித்ததால் பிரபலமான ஒரு நடிகை அதன் பிறகு காணாமல் போய்விட்டார். மேலும் ஒரு படத்தில் அவரின் தங்கையாக நடித்த நடிகைக்கும் இதே கதி தான்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

தமிழில் வளர்ந்து வந்த நடிகை ஒருவர் அந்த பிரபலமான நடிகரின் தங்கையாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு தமிழில் சுத்தமாக வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. வேறு ஒரு படத்தில் அவரின் தங்கையாக நடித்த 2 பேரும் காணாமல் போய்விட்டனர்.

நடிகைகள்

நடிகைகள்

அந்த நடிகரின் தங்கையாக நடித்தவர்களின் நிலையை பார்த்து பிற நடிகைகள் பயப்படுகிறார்கள். அவருக்கு தங்கையானால் நாமும் காணாமல் போய்விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X