பிரபல நடிகருக்காக கெஸ்ட் ஹவுசில் சண்டை.. ஒல்லி நடிகையை மிரட்டிய நம்பர் நடிகை..ரூட்டை மாற்றிய நடிகை!
சென்னை: அழகான நடிகையான இவருக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் நடிகைக்கு பட வாய்ப்பே இல்லாததால், எப்படியாவது ஒரு நல்ல படத்தில் நடித்துவிட வேண்டும் என்பதற்காக நான்கு எழுத்து நடிகை, கணவரின் அனுமதியோடு ரூட்டை மாற்றி பல விவகாரமான வேலைகளை செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவிற்கு நான்கு எழுத்து நடிகை அறிமுகமான போது கொழு கொழுவென இருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. தனது நடிப்பின் மூலமாகவும், அழகின் மூலமாகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதிகமாக கவர்ச்சி காட்டாமல், குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்தார். ஆனால், திடீரென இவருக்கு படவாய்ப்பு குறைந்து போனது. அதற்கு காரணம், உடல் எடை தான் என தவறாக புரிந்து கொண்ட நடிகை, கடுமையாக உடற்பயிற்சி செய்து, நோய் வந்த கோழி போல ஆகிவிட்டார். அதன் பிறகாவது பட வாய்ப்பு வரும் என எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு பிறகும் படவாய்ப்பு வராததால், திருமணம செய்து கொண்டு செட்டில் ஆனார்.

தாராள கவர்ச்சி: ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது என்று சொல்வார்கள், அதுபோல, நடிகைக்கு வீட்டில் சும்மா இருக்க முடியாததால், கையில் இருக்கும் படத்தை முடித்து விட்டு, மீண்டும் படவாய்ப்பு தேடி அலைந்து வருகிறார். திருமணம் ஆகிவிட்டதால், இனி மேல் நமக்கு படவாய்ப்பு வருவது, நம்மை ஓரம் கட்டிவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அந்த நடிகை, தாராளமாக கவர்ச்சி காட்ட நான் ரெடி என்பதை தனது செயலால் நிரூபித்தார். அந்த நான்கு எழுத்து நடிகை பாலிவுட் படம் ஒன்றில் நடித்து இருந்தார். அந்த படத்தின் விழாவிற்கு, மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து சென்றார். ஆனால், அதன் பிறகும் எந்த படவாய்ப்பும் வரவில்லை என்பதால், கணவரின் அனுமதியோடு விவகாரமான வேலையில் இறங்கி உள்ளார்.
கெஸ்ட் ஹவுசில் நடந்த சண்டை: இந்த நடிகை தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர் ஒருவருடன் சேர்ந்து நடித்த போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் கெஸ்ட் ஹவுஸ் வரை சென்றுள்ளது. அந்த வீட்டில் இருவரும் மூன்று நாட்கள் ஜாலியாக இருந்துள்ளனர். ஏற்கனவே அந்த நடிகருடன் உறவில் இருக்கும் நம்பர் நடிகையின் காதுக்கு இந்த விஷயம் தெரியவர, நம்பர் நடிகை சத்தமே இல்லாமல், நேரடியாக கெஸ்ட் ஹவுசுக்கே வந்து அந்த நான்கு எழுத்து நடிகையை வெளுத்து வாங்கி உள்ளார். இதுக்கு மேல இது தொடர்ந்தால் அவ்வளவு தான் என மிரட்டியும் உள்ளார். இதன் பின் நான்கு எழுத்து நடிகையுடன் இருந்த தொடர்பை அந்த பிரபல நடிகர் முறித்துக்கொண்டு, நம்பர் நடிகை தான் துணை என காலத்தை கழித்து வருகிறார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட நம்பர் நடிகை, அந்த நடிகருக்கு இருக்கும் பிரபலத்தை பயன்படுத்தி கொண்டு அடுத்தடுத்து படத்தில் நடித்து வருகிறார். நம்பர் நடிகைக்கு வயசு ஆனாலும், பல விதமான உடற் பயிற்சிகளை செய்து தனது அழகை அப்படியே பாதுகாத்து வருவதால், அவருக்கும் பட வாய்ப்பு குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











