ஹீரோக்கள், தயாரிப்பாளர்களிடம் மட்டுமல்ல.. சமீப காலமாக நடிகைகள் இவர்களுடன் அட்ஜெஸ்ட் பண்றாங்களா?
சென்னை: சினிமாவில் நடிகைகளாக சாதிப்பது ரொம்பவே கஷ்டமான விஷயம் தான் என பல முன்னணி நடிகைகளும் தெரிவித்துள்ளனர். பல பிரபல நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையை நாங்களும் கடந்து வந்திருக்கிறோம் என வெளிப்படையாகவே பேட்டிகளில் கூறியுள்ளனர். பெரும்பாலும் ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் இதுபோன்ற தொல்லைகள் இருக்கும் என பலரும் கூறியுள்ளனர். ஆனால், சமீப காலமாக நடிகைகள் இப்படியொரு சிக்கலை அந்த நபர்களிடம் சந்தித்து வருவதாக திகிலடையச் செய்யும் தகவல்கள் கசிந்துள்ளன.
நன்றாக நடிக்க தெரிந்தால் அதுதான் சினிமாவுக்கான என்ட்ரி டிக்கெட்டாக இருக்க வேண்டும். ஆனால், இங்கே சூழ்நிலையே வேறுமாதிரி உள்ளது. வாரிசு நடிகைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் சினிமாவுக்காக போராடி பல தடைகளை தாண்டி வரும் நல்ல நடிகைகளுக்கு கிடைப்பதில்லை.

மாடலிங் டு சினிமா: பெரும்பாலும் சினிமாவில் ஹீரோயின்களாக வரும் அதிகப்படியான பேர் மாடலிங் துறையில் இருந்து தான் சினிமாவுக்கு வருகின்றனர். சில பெரிய இடத்து பெண்கள் நடிகர்கள், இயக்குநர்களின் மகள்கள் மட்டுமே அப்படியே டைரக்ட்டாக சினிமாவுக்குள் நுழைகின்றனர். சில சீரியல் நடிகைகள், செய்தியாளர்கள், யூடியூப் பிரபலங்கள், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் என சினிமாவுக்கு பல்வேறு வழிகளில் இருந்து நடிகைகள் இறக்குமதி ஆகி வருகின்றனர்.
அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை: முதல் படத்தில் கமிட் ஆவதற்கு முன்பாகவே நடிகைகள் காஸ்டிங் இயக்குநரால் தேர்வு செய்யப்படும் போதே காஸ்டிங் கோச் பிரச்சனைகளை சந்தித்து விடுகின்றனர். எல்லா செலக்ஷனிலும் தேர்வாகும் நடிகைகளை கடைசியாக சில அட்ஜெஸ்ட்மென்ட்டுகள் இருக்கும். அதற்கு சம்மதம் என்றால் சொல்லுங்கள், நீங்க தான் இந்த படத்தின் ஹீரோயின் என பெரிய நடிகர்கள் படங்களுக்கு ஹீரோயின்களை புக் செய்யும் போது சிலர் வெளிப்படையாகவே பேசுவதாகவும் பகீர் தகவல்களை நடிகைகளே கூறியுள்ளனர்.
இன்னொரு சிக்கல்: தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களை தாண்டி தற்போது விளம்பர நிறுவனங்களை நடத்துபவர்களும் நடிகைகளுக்கு பெரிதாக தொல்லைக் கொடுத்து வருவதாக திடுக்கிட வைக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் நடிகைகள் பேசி சில பெயர் தெரியாத யாருமே பயன்படுத்தாத பொருட்களை விற்று வருகின்றனர். அதற்காக நடிகைகளுக்கு பெரிய தொகை கொடுக்கப்படுகிறது. ஆனால், இது எல்லா நடிகைகளுக்கும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கும் கிடைப்பதில்லையாம்.
அதிக பணம்: இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களை இளம் நடிகைகள் வாங்கி வெளியிடவே சில பல அட்ஜெஸ்ட்மென்ட்டுகளை செய்து தான் சம்பாதித்து வருவதாக அதிர்ச்சியான தகவல்கள் கசிந்துள்ளன. அதிகம் கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமில் ஆடைகளை குறைத்து போட்டோக்கள் போடும் நடிகைகளிடம் வெளிப்படையாகவே பேரம் பேசுவதாகவும் அவர்கள் சம்மதித்தால் விளம்பரங்களை கொடுத்து அதற்கான சம்பளத்தை எக்கச்சக்கமாக கொடுக்கின்றனர் எனவும் அதற்கு சம்மதிக்கவில்லை என்றால் அந்த நடிகைகளை கழட்டி விட்டு விடுவதாகவும் கூறுகின்றனர். சில நிறுவனங்களிடம் சில முக்கிய நடிகைகளே சிக்கித் தவித்து வருவதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











