இரண்டு படமும் அவுட்.. இனி அந்த ஹீரோயின் வேண்டவே வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சொல்லிட்டாங்களாம்?

By Staff

சென்னை: நல்ல திரைக்கதையை கொண்டு படம் எடுக்காமல் கோட்டையை விட்டு விட்டு படம் சொதப்பினால் ஹீரோயின் மீது பழி போடும் வழக்கம் இன்னமும் தொடர்ந்து கொண்டே வருகிறது.

புதுமுக நாயகி ஒருவரும் தற்போது அந்த பிரச்சனையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பண்டிகை தினத்துக்கு வெளியான இரு படங்களில் அவர் நடித்திருந்த நிலையில், இரண்டு படமும் சரிவர போகாததற்கு ஹீரோயின் ராசி தான் காரணம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது முயற்சியால்

தனது முயற்சியால்

ஏகப்பட்ட முன்னணி நடிகைகள், பக்கத்து மாநில வரவுகள் என அடிக்கடி வந்து கொண்டிருக்கும் கோடம்பாக்கத்தில் தனது முயற்சியால் பெரும் முயற்சியை மேற்கொண்டு புதுமுக நடிகையாக மாறியுள்ளார் அந்த ஆப் குயின். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பும் வரிசையாக கிடைக்க சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றார்.

இரண்டுமே அவுட்

இரண்டுமே அவுட்

ஏற்கனவே அவர் நடித்த திரைப்படங்கள் வசூல் ரீதியாக ஹிட் கொடுக்காத நிலையில், பண்டிகையை முன்னிட்டு வெளியான இரு படங்களும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளன. இரண்டு படமே எதிர்பார்த்த ஹிட் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இனி வேண்டாம்

இனி வேண்டாம்

இரண்டு படங்களும் சொதப்பிய நிலையில், ஏற்கனவே இதே போல ஒரு இளம் நடிகையை விரட்டி அடித்தது போலவே இவருக்கும் இனி வாய்ப்புகள் கொடுக்கக் கூடாது படம் ஹிட் அடிக்காது என்கிற பேச்சுக்களை சில முன்னணி தயாரிப்பாளர்களே கோடம்பாக்கத்தில் வைத்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஹீரோயின் மாதிரி இல்லை

ஹீரோயின் மாதிரி இல்லை

மேலும், அந்த நடிகை பார்ப்பதற்கு ஹீரோயின் மாதிரி இல்லை என்றும் ரசிகர்களை ஈர்க்கும் ஈர்ப்பு அவருக்கு இல்லை என்றும் ஏகப்பட்ட புகார்களை நடிகை மீது அடுக்கி அவரை ஓரங்கட்டும் முயற்சிகள் நடக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் என்ன பண்ணுவார்

அவர் என்ன பண்ணுவார்

நல்ல கதை மற்றும் திரைக்கதையை நம்பி படம் எடுத்தால் தெரியாத முகங்களின் படங்களும் ஹிட் அடித்து வரும் தமிழ் சினிமாவில் இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி ஹீரோயினை மட்டும் அதிர்ஷ்டம் இல்லாதவள் என சொல்லி ஒதுக்கப் போகிறார்கள் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

வாய்ப்பு குறையாது

வாய்ப்பு குறையாது

பட்ஜெட் ஹீரோயின் என்பதால் நிச்சயம் அவருக்கான வாய்ப்பு குறையாது என்றும் இனி பெரிய படங்களில் மட்டும் அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் ஏகப்பட்ட சின்ன பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடித்து தனது திறமையை அவர் வெளிப்படுத்துவார் என்றும் விரைவில் அவர் நடிப்பில் இன்னொரு படமும் இந்த மாதமே வித்தியாசமான கதையில் வெளியாகப் போகிறது அந்த படத்தின் வெற்றியை பொறுத்து தான் அவரது எதிர்காலம் இருக்கும் என்றும் கணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X