அடப்பாவமே.. அடுத்தடுத்து ஃபிளாப்.. அதிர்ஷ்டம் இல்லாத ஹீரோயினாக மார்க் செய்யப்பட்ட கால் அழகி?

By Staff

சென்னை: அந்த பிளாக்பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு வரிசையாக பெரிய ஹீரோக்களின் படங்களி கால் அழகி புக் செய்யப்பட்டார்.

ஆனால், யார் கண் பட்டதோ என்னமோ தெரியவில்லை அடுத்தடுத்து அவர் நடித்த இரு பெரிய பட்ஜெட் படங்கள் படு தோல்வியை சந்தித்துள்ளன.

இந்நிலையில், புதிய படங்களில் நடிகையை புக் பண்ணவே தயாரிப்பாளர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டார்களாம்.

ஆரம்பமே சொதப்பல்

ஆரம்பமே சொதப்பல்

கோலிவுட்டில் தான் முதன் முதலில் அந்த நடிகை காலடி எடுத்து வைத்தார். முதல் படமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீசான பிறகு பெரிய தோல்வியை சந்தித்தது. மீண்டும் அதே சுவரா என ரசிகர்கள் அவர் கம்பேக்கை நினைத்து கடுப்பான நிலையில், பல ஆண்டுகள் கழித்தும் அதே பழைய ராசி தான் அப்படியே நீடிக்கிறது என பேச்சுக்கள் எழுந்துள்ளன.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

பக்கத்து ஸ்டேட்டில் அந்த ஒரு படம் செம ஹிட் அடித்த நிலையில், இந்த நடிகையை பெரிய படங்களில் புக் பண்ண ஆரம்பித்தார்கள். முன்னணி ஹீரோயின்களை ஒதுக்கி விட்டு இங்கேயும் அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து இரு பெரிய நடிகர்களின் படங்களும் ஃபிளாப் ஆன நிலையில், தற்போது அந்த பழி நடிகையின் தலை மீது வந்து விடிந்திருக்கிறது.

ராசியில்லாத நடிகை

ராசியில்லாத நடிகை

இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்கள் உள்ளிட்ட பலரது சொதப்பல் காரணமாக ஒரு படம் ஃபிளாப் ஆனாலும், கடைசியாக நடிகையின் ராசி தான் சரியில்லை என முத்திரை குத்தி அவரது மார்க்கெட்டை மேலும், காலி செய்து விடுவார்கள். அதே போன்ற விஷயம் தான் தற்போது கால் அழகிக்கும் நடந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தயாரிப்பாளர்கள் தப்பி ஓட்டம்

தயாரிப்பாளர்கள் தப்பி ஓட்டம்

புதிதாக இந்த நடிகையை புக் பண்ண வேண்டாம் என சில தயாரிப்பாளர்கள் தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீண்டும் கோலிவுட்டில் கால் பதித்த கால் அழகியை புக் பண்ண காத்திருந்தவர்கள் ஒரே கும்பிடு போட்டு வேண்டாம் என சொல்லி விட்டார்களாம். சிலர் கொடுத்த அட்வான்ஸை திரும்பித் தந்துடுங்க என்றும் டார்ச்சர் செய்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

கவலை படாத நடிகை

கவலை படாத நடிகை

அந்த கடவுள் பெயர் கொண்ட ஹீரோவுடன் தான் நடித்து வரும் படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையுடன் நடிகை எந்தவொரு கவலையும் படாமல் உறுதியாக உள்ளார். அந்த படம் ஹிட் அடித்த பிறகு மீண்டும் தன்னை தேடி தயாரிப்பாளர்கள் வந்து குவிவார்கள் என்பதால், தோல்வி அடைந்த படங்கள் பற்றிய கவலை விடுத்து அடுத்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X