அய்யோ அந்த நடிகையா.. ஆளவிடுங்கடா சாமி.. ஓட்டம் பிடிக்கும் நடிகர்கள்.. அந்த விஷயம் தான் காரணமாம்!

சென்னை: புதிதாக கோலிவுட்டில் காலடியெடுத்து வைத்த இளம் நடிகை தனது சம்பளத்தை குறைத்துக் கொண்ட நிலையிலும் அவரை படங்களில் ஒப்பந்தம் செய்யவே வேண்டாம் என நடிகர்களும் தயாரிப்பாளர்களும் ஓட்டம் பிடித்து வருகின்றனராம்.

முற்போக்கு சிந்தனைகள் பல கொண்ட திரையுலகில் இன்னமும் அதிர்ஷ்டம் மற்றும் ராசி உள்ளிட்டவை பார்க்கப்பட்டுத் தான் வருகிறது.

இதனால், புதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அந்த நடிகை கடும் அப்செட்டில் உள்ளாராம்.

பக்கத்து மாநிலம்

பக்கத்து மாநிலம்

பக்கத்து மாநிலத்தில் இளம் நடிகையாக அறிமுகமான அந்த ஸ்வீட் நடிகைக்கு ஏகப்பட்ட கிராக்கிகள் ஏற்பட்டன. கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் விட்டு விடக் கூடாது என்பதற்காக, கதையில் அதிக ஆர்வத்தை செலுத்தாமல் கோலிவுட்டில் கிடைத்த அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளிக் கொண்டார்.

இரண்டு படங்கள்

இரண்டு படங்கள்

ஒரே நாளில் தனது இரண்டு படங்கள் கோலிவுட்டில் ரிலீஸ் ஆவதை நினைத்து சந்தோஷத்தின் உச்சத்தில் அந்த நடிகை ஆட்டம் போட்டார். இரண்டு படத்திலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளதால், கோலிவுட்டில் அடுத்த கவர்ச்சிக் கன்னியே நான் தான் என நினைத்துக் கொண்டிருந்தார்.

ரெண்டுமே ஃபிளாப்

ரெண்டுமே ஃபிளாப்

ஆனால், துரதிர்ஷ்டவசமாக வெளியான அந்த இரு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தன. மேலும், அந்த படங்களின் திரைக்கதை குறித்தும் அறிமுக நடிகையின் மோசமான நடிப்பையும் விளாசித் தள்ளியிருந்தனர் விமர்சகர்கள்.

சம்பளம் குறைப்பு

சம்பளம் குறைப்பு

தனது படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், உடனடியாக சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொண்டு புதிய வாய்ப்புகளை பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார் அந்த நடிகை. சில இயக்குநர்கள் அந்த ஹீரோயினுக்கு ஓகே சொல்லி உள்ள நிலையில், ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் வேண்டாம் என்கின்றனராம்.

ராசி இல்லை

ராசி இல்லை

திரைக்கதை சரியாக இல்லாமல் படம் ஓடாமல் போனதற்கு நடிகையின் ராசி தான் சரியில்லை என மற்ற தயாரிப்பாளர்கள் பலரும் கருதுவுதாக கோலிவுட்டில் பேச்சு அடிபட்டு வருகிறது. மேலும், அந்த நடிகைக்கு ரசிகர்களை ஈர்க்கும் திறன் அந்த அளவுக்கு இல்லை என்றும் ஒதுக்கி வருகின்றனர்.

நடிகை அப்செட்

நடிகை அப்செட்

புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த அந்த நடிகை இதன் காரணமாக கடும் அப்செட்டில் உள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் அரை குறை ஆடையில் வலம் வந்த அவர், கடுப்பில் சமூக வலைதளங்களில் இருந்து அப்ஸ்காண்ட் ஆகி உள்ளார். ஏற்கனவே எடுத்து முடித்த படங்களே எப்போது ரிலீசாகும் என தெரியாத நிலையில், அந்த ஸ்வீட் நடிகைக்கு பட வாய்ப்புகள் எப்படித்தான் கிடைக்கப் போகுதோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X