ரொம்ப மோசம்.. அடுத்த படத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.. அதிரடியாக வேற படத்துக்கு தாவிய பிரதர் நடிகர்?

By Staff

சென்னை: பிரதர் நடிகர் பெரும் நம்பிக்கையுடன் நடித்து வெளியிட்ட படம் பண்டிகையில் வெளியானாலும் கல்லா கட்டாமல் கவிழ்த்து விட்ட நிலையில், அடுத்து உடனடியாக ஒரு ஹிட் படத்தைக் கொடுத்தாக வேண்டும் என்கிற யோசனைக்கு சென்று விட்டாராம்.

ஏற்கனவே பல ஆண்டுகள் காணாமல் போய் காலாவதியான இயக்குநர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் அந்த பிரதர் நடிகர் அடுத்து அந்த படத்தை வெளியிட்டு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டாராம்.

After facing big flop brother actor stop his ongoing project and started a new one?

இந்நிலையில், புதிதாக இன்னொரு இயக்குநர் படத்தில் நடித்து அந்த படத்தை முதலில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

கணக்கு தப்பாகிடுச்சு: எப்பவுமே பிரதர் நடிகர் போடும் கணக்கு மிஸ் ஆகாமல் இருந்து வந்த சூழலில் பல இயக்குநர்களை இவர் வளர்த்து விட்டிருக்கிறார். இவரை வைத்து ஹிட் கொடுத்து பெரியாளாக ஆன பின்பு மீண்டும் இவர் பக்கம் வராமல் மற்ற பிரபல நடிகர்களை தேடி அந்த இயக்குநர்கள் நகர்ந்து சென்று விடுவார்கள். இந்நிலையில், இந்த முறை அப்படி இன்னொரு இயக்குநரையும் வளர்த்து விட நினைத்து பிரதர் நடிகர் போட்ட கணக்கு மிஸ்ஸாகி விட்டது.

பயங்கர டென்ஷன்: தனது வாழ்க்கையில் முக்கியமான மைல் ஸ்டோன் படம் என்பதால் அப்பாவின் ஃபேவரைட் இயக்குநரை நம்பி களத்தில் இறங்கிய பிரதர் ஹீரோவுக்கு இயக்குநர் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதை அறிந்து பயங்கர டென்ஷன் ஆகி விட்டாராம்.

படத்தையே நிறுத்திவிட்டார்: அடுத்த படமும் ஊத்திக் கொண்டால் இண்டஸ்ட்ரியில் இருந்தே காணாமல் போய் விடுவோம் என்கிற பயமே அந்த நடிகருக்கு வந்த நிலையில், தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ரிஸ்க்கான படத்தை கை விட்டு விட்டு பெஸ்ட்டான இயக்குநருடன் இணைந்து ஹிட் கொடுத்து விடலாம் என்கிற முனைப்பில் அடுத்த படத்துக்கு அப்படியே தாவி விட்டார் என்றும் அந்த இயக்குநரை நம்பாமல் தவிக்க விட்டு விட்டார் என்றும் பேச்சுக்கள் கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளன.

நடிகரை நம்பி பல ஆண்டுகளாக ஃபாலோ பண்ண அந்த இயக்குநர் தற்போது என்ன செய்வது என்றே புரியாமல் தவித்து வருகிறாராம். படம் வெளியான பின்னர் அடி வாங்குவது நான் தானே என இயக்குநர் சுயநலமாக எடுத்த முடிவு அவருக்கு கை கொடுக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X