லக்கி லக்கின்னு சொல்லியே உசுப்பேத்த... இப்ப சம்பளத்தை கன்னாபின்னான்னு ஏத்திட்டாராம் ஹீரோயின்!

By

சென்னை: அந்த ஹீரோயினை லக்கி லக்கி என்று உசுப்பேற்றியதை அடுத்து, தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்திவிட்டாராம் அந்த ஹீரோயின்.

தமிழில் அந்த ஹீரோயின் நடித்து ஒரே ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதுவும் தெலுங்கில் இருந்து இறக்குமதியான படம்.

அடுத்து அந்த கைதி நடிகருடன் நடித்திருக்கிறார் ஒரு படத்தில். இன்னும் அது ரிலீஸ் ஆகவில்லை. அதற்குல் தமிழில் சில டாப் ஹீரோ படங்களுக்கு அவரை பேசி வருகின்றனர்.

அதிரடி சோதனை

அதிரடி சோதனை

தெலுங்கில் மொத்தம் நான்கு படத்தில்தான் நடித்திருக்கிரார் அந்த ஹீரோயின். நான்கும் ஹிட். கடந்த மாதம் இவர் பாபுகாருடன் நடித்து வெளியான படமும் ஹிட். சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள இவரது வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நடிகை வீட்டில் இல்லை.

விளம்பர நிறுவனம்

விளம்பர நிறுவனம்

வீட்டில் இருந்த நகைகள், பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். அவர் வீட்டில் கணக்கில் வராத பணம் கத்தை கத்தையாக இருந்ததாகவும் அதை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அந்த நடிகை விளம்பர நிறுவனம் நடத்தி வருவதும், பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதும் தெரியவந்தது.

நடித்ததெல்லாம் ஹிட்

நடித்ததெல்லாம் ஹிட்

நடிகைக்கு சொந்தமாக திருமண மண்டபமும் இருக்கிறதாம். இந்த இளம் வயதிலேயே இவ்வளவு சொத்து சேர்த்தது எப்படி ஆச்சரியப்பட்டார்கள் அதிகாரிகள். இந்நிலையில் தெலுங்கில் இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட்டாக, நடிகையை லக்கி ஹீரோயின் என்றார்கள். அவர் நடித்தால் படம் ஹிட் என்று பெரிய ஹீரோக்கள் புக் செய்தனர்.

இரண்டு என்கிறார்

இரண்டு என்கிறார்

இந்நிலையில் இதை சரியாகப் படுத்திக்கொண்ட ஹீரோயின் தனது சம்பளத்தை அநியாயத்துக்கு உயர்த்திவிட்டார் என்கிறார்கள். அதாவது இதற்கு முன்பு வரை ஒரு கோடி கேட்டுக்கொண்டிருந்த ஹீரோயின் இப்போது இரண்டு என்கிறாராம். ஒரு தமிழ் படத்துக்கு நடிகையிடன் கால்ஷீட் கேட்டபோது, இந்த தொகையை சொல்லி இருக்கிறாராம் நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X