நல்லதுன்னு நினைச்சு பண்ணப்போய் இப்படி வில்லங்கமாயிடுச்சே... கவலையில் தேசிய விருது ஹீரோயின்

By

சென்னை: நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று கவலையில் இருக்கிறார் சமீபத்தில் தேசிய விருது பெற்ற அந்த நடிகை.

அந்த இளம் நடிகை, தமிழ், தெலுங்கில் டப் டுப் பென்று முன்னேறி வந்தார். டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவர், அந்த முன்னாள் ஹீரோயின் கதையில் நடித்ததை அடுத்து, நல்ல பெயர்.

இதற்காக தேசிய விருதும் கிடைத்தது நடிகைக்கு. பாராட்டாத பிரபலங்கள் இல்லை. மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார்.

இந்தி வாய்ப்பு

இந்தி வாய்ப்பு

அவர் மீது மற்ற மொழி சினிமாகாரர்களின் கண் விழுந்தது. இந்தியில் பட வாய்ப்பு ஒன்று கதவைத்தட்டியது. டாப் ஹீரோ வேறு. பெரிய தயாரிப்பாளர். ஒப்புக்கொண்டார்.

அம்மாவாக

அம்மாவாக

உண்மை சம்பவக் கதையான அதில், குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். ஆரம்பத்தில் புஸ்புஸ்சென்று இருந்த நடிகை, யார் கொடுத்த ஐடியாவையோ நம்பினார்.

ஒல்லி பெல்லி

ஒல்லி பெல்லி

அதாவது, இந்தியில எல்லாம் ஒல்லியா இருந்தாதான் ரசிப்பாங்க... எல்லா ஹீரோயினையும் பாருங்க என்று லிஸ்ட்டை கொடுக்க, இவருக்கும் ஒல்லி மீது உடனடி ஆசை. டயட்டில் இருந்து உடலை குறைத்தார்.

ஏம்மா இப்படி

ஏம்மா இப்படி

நன்றாக இருந்தவர் அவரது தங்கச்சி போலவே மாறினார். பிறகுதான் வில்லங்கம் விஸ்வரூபம் எடுத்தது. 'நாங்க இப்படி கேட்கவே இல்லையே? எங்கக்கிட்ட கேட்காம ஏம்மா, இப்படி பண்ணுனீங்க?' என்றது படக்குழு.

தங்கச்சி மாதிரி

தங்கச்சி மாதிரி

நடிகை அப்செட். 'இப்படியிருந்தா ஹீரோவுக்கு தங்கச்சி மாதிரி தெரிவீங்க? என்று உடனடியாக அவரை மாற்றிவிட்டு அடுத்த ஹீரோயினை தேடியது. பிறகு தேசிய விருது பெற்ற மற்றொரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்திருக்கிறது. நாம என்னமோ நினைச்சு பண்ணினா, இப்படியாயிடுச்சே என்று ஓரமாக உட்கார்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் ஹீரோயின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X