கேரளாவில் வெடித்த சர்ச்சை.. கோலிவுட்டில் சிக்கப் போகும் பெரும்புள்ளி.. நடிகை வாய் திறக்கப் போறாராம்?

By Staff

சென்னை: கோலிவுட்டில் ஏகப்பட்ட நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த பிளேபாய் நடிகர் சீக்கிரமே பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கப் போவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையாள சினிமாவில் முன்னணி பிரபலங்கள் மீதே நடிகைகள் வெளிப்படையாக பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

கேரளாவில் தற்போது இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் சூடு பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சுச்சி லீக்ஸ் போன்ற விஷயங்கள் பரபரப்பை கிளப்பிய நிலையில், இசையமைப்பாளர் ஒருவர் மனைவி பற்றி பேசியதும் ஒரு நடிகரை ரொம்பவே டேமேஜ் செய்தது.

gossip kollywood actress gossip

அவர் மட்டுமின்றி நடிகைகளின் விவாகரத்துக்கு காரணமே அந்த பிரபல நடிகர் தான் என்றும் அவர் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் குவிந்து வந்தன. இந்நிலையில், இதே வேகத்தில் நம்முடைய பழைய பிரச்சனையையும் அவிழ்த்து விட்டால் தான் சரியாக அந்த பெரும்புள்ளி சிக்குவார் என நடிகை ஒருவர் பல நாள் ரகசியத்தை அம்பலப்படுத்தப் போவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பணத்திமிர்: சினிமாவில் கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள் மற்றும் சில நடிகைகள் குடும்பத்தை தாண்டியும் தவறான உறவுகளை வைத்துக் கொள்வதையும் இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் வாய்ப்பு தருவதாகக் கூறி அவர்களை படுக்கை அறைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் அதிகமாகவே உள்ளதாக கூறுகின்றனர். போதைப் பொருள் விவகாரத்தில் பல சினிமா பிரபலங்கள் சிக்கி வந்த நிலையில், அதை விட பெரிய பிரச்சனையாக இந்த பாலியல் குற்றச்சாட்டு பிரச்சனை தற்போது தலை விரித்து ஆடுகிறது.

ஆசைக்காட்டி மோசம்: பல பெண்களுக்கு சினிமாவில் ஹீரோயின் சான்ஸ் வாங்கித் தருகிறேன் என ஆசைக்காட்டி நடிகர்கள் மோசம் செய்து விடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், கொஞ்ச நாட்கள் அந்த பெண்களின் வாயை அடைத்து வைக்க பணத்தையும் கொடுப்பதாக ஒரு கட்டத்திற்கு மேல், அந்த பெண்கள் நடிகர் தனக்கு செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை உணர்ந்த பின்னர், அந்த நடிகர் தன்னை ஏதாவது செய்து விடுவாரோ என்கிற அச்சம் நீங்கிய பின்னர் வாய் திறந்து பேச ஆரம்பித்து விடுகின்றனர்.

சிக்கப் போகும் பெரும்புள்ளி?: மலையாள சினிமாவில் வரிசையாக பல முன்னணி பிரபலங்களே மாட்டி தவிக்கும் நிலையில், கோலிவுட்டில் நல்ல அந்தஸ்த்துடன் நடமாடிக் கொண்டிருக்கும் அந்த பிளே பாய் நடிகர் கூடிய சீக்கிரமே சிக்கப் போவதாகவும் இளம் நடிகை ஒருவர் சில வருடங்களுக்கு முன்பாக அந்த நடிகரிடம் சிக்கித் தவித்த வேதனைகளை வெளிப்படுத்த தயாராகி விட்டதாக கோடம்பாக்கத்தில் பெரும் புயல் அடித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X