கோடிக் கணக்கில் புரமோஷன் பண்ண அந்த படமே ஒதுங்குதே.. நாம என்ன செய்யலாம்.. அச்சத்தில் பவர் படக்குழு!
சென்னை: பல நூறு கோடிகளை கொட்டி பிரம்மாண்டமாக படத்தை தயாரித்து விட்டு பறந்து பறந்து புரமோஷன் பண்ண அந்த படமே கொடிய நோய் பரவல் காரணமாக தற்போது ரிலீஸை தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில், பல முறை தள்ளி வைக்கப்பட்ட அந்த பவர் படத்தை இந்த முறை தைரியமாக வெளியிடலாமா? வேண்டாமா? என்கிற தீவிர ஆலோசனையில் தயாரிப்பு தரப்பு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடுமையாக வசூல் பாதிக்கும் என்பதால் ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது என்பதில் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருப்பதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

நடிகர் முடிவு
ஏகப்பட்ட தடைகளை சந்தித்து விட்டோம். இந்த முறை படத்தை வெளியிட்டு விடலாம். இப்போ ரிலீஸ் செய்யவில்லை என்றால் மேலும், பலத்த நஷ்டம் அடைய நிறைய வாய்ப்பு இருக்கு என இயக்குநர் தரப்பு சொன்ன அறிவுரையை நடிகர் தரப்பு முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்போ வேண்டாம்
ஆனால், தயாரிப்பு தரப்பின் நட்பு வட்டம் பவர் படத்தை இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என ஆலோசனை கூறி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. படத்தின் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ள நிலையில், படம் எப்போ வெளியானாலும் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் தான். அவசரப்பட்டு வெளியிட்டால் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்து வருவதால் தயாரிப்பு தரப்பு ஆழ்ந்த யோசனையில் இறங்கி உள்ளது.

சரியாகுமா
திடீரென புதிதாக உருவெடுத்துள்ள கொடிய நோய் பாதிப்பு இன்னும் சில மாதங்களில் சரியாகுமா? அல்லது இப்போது இருக்கும் நிலைமையை விட மோசமாகி விடுமா? என ஏகப்பட்ட தயக்கங்களும் சந்தேகங்களும் படக்குழுவுக்கு எழுந்துள்ளது.

அவ்வளவு புரமோஷன் பண்ண படமே
பல நூறு கோடிகளில் உருவாக்கப்பட்டு சில பல கோடிகளை செலவு செய்து ஒவ்வொரு ஸ்டேட்டிலும் பிரம்மாண்டமாக புரமோஷன் பண்ண அந்த படமே அதிரடியாக மீண்டும் ஒத்திவைப்பை அறிவித்துள்ளது தயாரிப்பு தரப்பை பெரிய அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நாமும் யோசித்து வரலாமா? அல்லது மோதி பார்த்து விடலாமா? என புரியாமல் குழம்பிப் போய் வருகின்றனர்.

மக்களுக்காக
கொடிய நோய் பரவுவதை காரணம் காட்டி பிறந்தநாள் மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸையே ஒத்தி வைத்த நடிகர் தற்போது மக்களின் நலனுக்காக சிந்தித்து படத்தின் ரிலீஸை தள்ளிப் போடுவார் என்றே தயாரிப்பு தரப்புக்கு அந்த பாயின்ட்டை வைத்து பேச நட்பு வட்டம் ஆலோசனை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. ரசிகர்களுக்காக படம் வெளியாக போகிறதா? அல்லது மக்களுக்காக தள்ளிப் போக போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











