சேதி தெரியுமா?.. ஓட்டவாய் நாராயணனை ஓரங்கட்ட உத்தரவு போட்ட உச்ச நடிகர்.. சிஷ்யனும் உஷாராகிட்டாராம்!

By Staff

சென்னை: குருவுக்கு அந்த கேங்ஸ்டர் இயக்குநர் படம் இயக்க தனக்கும் ஒரு படம் பண்ணி காப்பாற்றி விட கெஞ்சிய சிஷ்யனுக்கு தன்னுடைய சிஷ்ய இயக்குநரை அனுப்பி இன்னொரு சம்பவம் பண்ண ரெடியாகி இருந்தார் அந்த இயக்குநர்.

ஆனால், உச்ச நடிகர் உஷாராக அந்த சேர்க்கையை தனது படத்தில் இருந்து ஓரங்கட்ட நினைத்த நிலையில், அந்த ரகசியம் காத்து வாக்குல சிஷ்யனுக்கு சென்ற நிலையில், தற்போது இவரும் அந்த ஓட்ட வாய் நாராயணனை ஓரங்கட்ட முடிவு செய்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

After Star actor avoid that director his fan actor also wish to change that director for his next?

ஒண்ணுமே இல்லாத விஷயத்திற்கு ஓவர் பில்டப் கொடுத்து ரசிகர்களை தூண்டி விட்டு குளிர் காய்ந்து வந்த அந்த இயக்குநரை கிட்டவே சேர்க்க கூடாது என்கிற கண்டிஷனை உச்ச நடிகர் உஷாராக போட்டுள்ளாராம்.

இயக்குநர் ஆன பின்பும்: இயக்குநராக அறிமுகம் ஆனாலும், தனக்கான படங்களை பண்ணாமல் தனது நண்பனுடன் இணைந்து சம்பவம் செய்யப் போகிறேன் என ஓவர் பில்டப் கொடுத்து அவரையும் உருப்பட விடாமல் செய்ததே அந்த ஓட்டவாய் நாராயணன் தான் என்றும் அவருடைய சேர்க்கையால் தான் சில மாஸாக வரவேண்டிய சீன்கள் எல்லாம் காமெடி காட்சிகளாக மாறி மாஸ் நடிகர் படத்துக்கு வேட்டு வைத்து விட்டதாக கூறுகின்றனர்.

ஐடியா மணி: கேங்ஸ்டர் இயக்குநருக்கு பெரிதாக கதை பற்றிய ஐடியா இல்லாத நிலையில், தன்னுடன் கூடவே அந்த ஐடியா மணியை கூட்டிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறாராம். சமீபத்தில் வெளியான படம் வரை அந்த ஐடியா மணி பண்ண வேலையால் தான் பல சொதப்பல்களை சொதப்பி நிற்பதாகவும் ரசிகர்கள் அந்த ஓட்டவாய் நாராயணனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

உச்ச நடிகர் உஷார்: அந்த ஐடியா மணி நம்ம படத்துக்கு வேண்டாம், எங்கிட்ட ஏற்கனவே சூப்பரான உண்மையாவே ஐடியா உள்ள மணி இருக்காரு, அவரை வச்சுத்தான் சைலன்ட்டா போன படம் அந்த வேஸ்ட் டைரக்டரை வச்சே ஹிட் அடிச்சேன். இந்த முறை நீ மட்டும் போதும் வா என உஷாராக அந்த ஓட்ட வாய் நாராயணனை கழட்டி விட்டுட்டாராம்.

இயக்குநரை மாத்துங்க: குருவே உஷாரான நிலையில், என் படத்தை அந்த ஐடியா மணியா இயக்கப் போறான். அய்யோ ஏற்கனவே ஏகப்பட்ட அடி வாங்கிட்டேன். நானே டைரக்ட் பண்ணாவே படம் நல்லா இருக்கும். ஒழுங்கா இயக்குநரை மாத்துங்க இல்லைன்னா நான் என்னோட சீரிஸை மீண்டும் ஸ்டார்ட் பண்ண போயிடுறேன் என்றே நடிகர் சொல்லி இருப்பதாக கோலிவுட்டில் சுடச் சுட பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X