இனி அரசாங்கமே நம்முடையது.. நடிகை வீட்டில் நேற்றிலிருந்து பார்ட்டி பட்டையை கிளப்புதாம்

By Staff

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று பெரிய ஆச்சரியமே நிகழ்ந்துவிட்டது. புதிய பயணத்தை தொடங்கிய ஒரு நடிகர் எல்லோரையும் அடித்து காலி செய்துவிட்டு டாப்பில் வந்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் அத்தனை பேருக்கும் ஆச்சரியம். சூழல் இப்படி இருக்க நடிகரின் வெற்றி நடிகையை கொண்டாட்டத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிட்டதாம். இதன் காரணமாக வீட்டில் தொடர்ந்து பார்ட்டிகளை வைத்துவருகிறாராம்.

தமிழ் சினிமாவில் இந்த நடிகர் நடிக்க வந்தபோது சந்திக்காத விமர்சனங்களும், கிண்டலும் இல்லை. எவ்வளவோ முறை அவர் அழிந்துவிடுவார் என்றுதான் எதிரிகள் பேசினார்கள். அவரோ அத்தனையையும் எதிர்கொண்டு திரைத்துறையில் தன்னை தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றிக்கொண்டார். இதன் காரணமாக செல்வாக்கு பெருக; அந்த செல்வாக்கை வேறு களத்தில் அறுவடை செய்ய முடிவெடுத்து; அதன்படி செயல்படவும் தொடங்கிவிட்டார். அது அவரது ரசிகர்களுக்கு பெரிய நிம்மதியை கொடுத்தது.

After Stunning Win Actress Throws Lavish Party Link-Up Rumours Intensify
Photo Credit:

ஓவர் டார்ச்சர்: அவர் புதிய களத்துக்கு வந்ததிலிருந்து அவருக்கு ஏகப்பட்ட டார்ச்சர்கள் முளைத்தன. அவை அனைத்தும் அவரால் உருவானவையா அல்லது எதிரிகளால் உருவாக்கப்பட்டவையா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் நடிகர் திரைத்துறையில் பிரச்னைகளை சந்தித்தபோது எப்படி எதிர்கொண்டாரோ அதேபோல்தான் இங்கேயும் நடந்துகொண்டார். அதேசமயம் புதிய களத்தில் அவருக்கு எதிரான முடிவுகள்தான் கிடைக்கும் என ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்தது.

Also Read
சப்ஸ்கிரிப்ஷனில் சக்கை காசு பார்க்கும் நடிகை.. எக்ஸ்குளுசிவ் வீடியோக்கள் லீக் ஆகிடுச்சுனு வருத்தமாம்
சப்ஸ்கிரிப்ஷனில் சக்கை காசு பார்க்கும் நடிகை.. எக்ஸ்குளுசிவ் வீடியோக்கள் லீக் ஆகிடுச்சுனு வருத்தமாம்

அடித்து தூக்கிய நடிகர்: ஆனால் திரைத்துறையில் மட்டும் நான் மாஸ் இல்லை; எந்த களத்துக்கு வந்தாலும் நான்தான் மாஸ் என்பதை நிரூபித்துவிட்டார். பெரிய பெரிய ஆல மரங்களையே சாய்த்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நடிகரின் இந்த அசுரத்தனமான வளர்ச்சியையும், மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கையும் பார்த்து அனைவருமே மிரண்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். விரைவில் தலைமையேற்க போகும் நடிகருக்காக எல்லோருமே வெயிட்டிங்.

மகிழ்ச்சியில் நடிகை: இதற்கிடையே நடிகரின் வாழ்க்கையில் ஒரு நடிகையின் பெயரை அடிக்கடி இழுத்துவிடுகிறார்கள். இதுவரை அவர்களுக்குள் நல்ல நட்பு மட்டுமே இருப்பதாக அவரை சுற்றி இருப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் பொய்; அவர்களுக்குள் நட்பை தாண்டிய ஒரு உறவு இருக்கிறது என்பது பெரும்பாலானோரின் கருத்து. நடிகையின் நடவடிக்கைகளும் அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கிறது. இந்நிலையில் நடிகை பற்றி புதிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில் வட்டமடிக்க தொடங்கியிருக்கிறது.

என்ன கிசுகிசு?: அதாவது புதிய களத்தில் நடிகர் அங்கீகரிக்கப்பட்டிருப்பது அம்மணிக்கு ஏகபோக மகிழ்ச்சியாம். நேற்று நேரில் சந்தித்து ஃபார்மலிட்டிக்கு வாழ்த்தும் கூறினார். அப்போது தன்னுடைய அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து நடிகையிடம் நடிகர் ஆலோசித்ததாகவும்; அதற்கு அம்மணியும் சில ஐடியாக்களை சொன்னாராம். அங்கிருந்து நேராக தன் வீட்டுக்கு திரும்பிய அவர் தன்னுடைய தோழிகள், தோழர்கள் என ஒருவர் விடாமல் அழைத்து பார்ட்டியில் மிரட்டிவிட்டாராம். இனிமேல் அரசாங்கமே நம்முடையதுதான் என்று அதில் ஓவர் பிதற்றலாம். அந்த பார்ட்டி விடிய விடிய நடந்து விடிந்த பிறகும் தொடர்ந்ததாம். அந்தப் பார்ட்டியை கேள்விப்பட்டு திரைத்துறையினர் மிரண்டு போயிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X