»   »  வாரிசு மீது வருத்தத்தில் இருக்கும் அகோரி இயக்குநர்!

வாரிசு மீது வருத்தத்தில் இருக்கும் அகோரி இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அவர் இயக்கத்தில் நடிப்பதற்காக நடிக நடிகைகள் ஏங்கியது ஒரு காலம். ஆனால் இப்போது அப்படியில்லை... அவர் அழைத்தால் ஓட்டம் எடுக்கிறார்கள். வரிசையாக மூன்று படங்கள் ஃப்ளாப். அதிலும் கடைசியாக வந்த படம் சரியான அடி.

மெகா பட்ஜெட் படமாக இல்லாவிட்டாலும் சின்ன படமாகவாவது எடுக்கலாம் என்று தன்னை பெரிதும் மதிப்பதாக சொல்லிவரும் வாரிசு நடிகரை அணுகினார்.

சொந்த தயாரிப்பு கம்பெனி தொடங்கும் அளவுக்கு வளர்ந்துவிட்ட அந்த வாரிசு ஹீரோவும் தன்னை மதிக்கவில்லை என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லையாம் இயக்குனருக்கு.

எனவேதான் ஒரு தயாரிப்பாளர் மகனையும், சிங்கர் ஹீரோயினையும் வைத்து படம் பண்ணும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார் என்கிறார்கள். இந்த ஒரே படத்திலேயே இரண்டு படங்கள் சொந்தமாக தயாரிக்கும் அளவுக்கு சம்பாதித்துவிடுவார் என்று கண்ணடிக்கிறார்கள்.

English summary
Agori director is unhappy with Paradesi actor due to the later not giving call sheet to him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil