»   »  காப்பிக் கதை என்பதை மறைக்க 'புதுக் கதை' விட்ட படக்குழு!

காப்பிக் கதை என்பதை மறைக்க 'புதுக் கதை' விட்ட படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏர் படத்தின் கதை ஒரு கொரியன் சீரியலின் காப்பி என்று வந்த செய்தியை மறைக்கும் விதமாக அந்த படம் ஒரு உண்மைக் கதை என்று பிரஸ் ரிலீஸ் அனுப்பியது படக்குழு.

லெஜண்ட் இயக்குநர் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ஏர் படம் ரசிகர்களை பெரிதாக ஏமாற்றியது. அது மட்டுமல்லாமல் படம் ஒரு கொரியன் சீரியலின் அப்பட்டமான காப்பி என்று ஆதாரங்களுடன் செய்தி வர கலங்கிப் போய்விட்டதாம் படக்குழு.

இதற்கிடையே யாரோ ஒரு புண்ணியவான் 'இது கார்கில் வீரர் ஒருவரின் சொந்தக் கதை' என்று சமூக வலைதளத்தில் எழுதினார். உடனே அப்பாடா... ஒரு நல்ல பாய்ண்ட் கிடைத்தது என்று அதையே பிரஸ் ரிலீஸாக்கி அனுப்பி விட்டார்களாம்.

பிரஸ் ரிலீஸ் இயக்குநர் பெயரில் வரவில்லை. ஆனா இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வந்திருக்கிறது.

இதுவும் 'மாப்ள இவர் தான் ஆனா இவர் போட்டிருக்கற சட்டை' கதை தானா?

Read more about: gossip, கிசுகிசு
English summary
That latest air film unit sent a press release without mentioning the director name that the story of the movie is original.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil