»   »  அரண்மனையில் ஐஸ் கல்யாணம்?

அரண்மனையில் ஐஸ் கல்யாணம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சன்திருமணம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

ஐஸ், அபிஷேக் கல்யாணம் ஒரு வழியாக நிச்சயமாகி விட்டது. மும்பையில் உள்ளஅமிதாப் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தை நடத்தி முடித்துள்ளனர். திருமண தேதிகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அமிதாப் குடும்பம் அறிவிக்கவில்லை.

பிப்ரவரி 19 அல்லது மார்ச் 7ம் தேதி ஆகியவற்றில் ஒன்றில் திருமணம்நடைபெறலாம் என கூறப்படுகிறது. எந்தத் தேதியாக இருந்தாலும் மார்ச் 14ம்தேதிக்குள் கல்யாணத்தை முடித்து விட வேண்டும். அதற்குப் பிறகு கெட்ட காலம்ஆரம்பிக்கிறது என்று அமிதாப்பின் குடும்ப ஜோதிடர் அறிவுறுத்தியுள்ளாராம்.

திருமணம் எங்கு நடைபெறும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால்ஜெய்ப்பூ>ல் உள்ள அரண்மனை அல்லது உதய்ப்பூரில் திருமணம் நடைபெறக் கூடும்என கூறப்படுகிறது.

ஐஸ்-அபி கல்யாணத்திற்கு பெரும் புள்ளிகளின் கூட்டம் அலைமோதும் என்பதால்கிராண்ட் ஆக கல்யாணத்தை நடத்த அமிதாப் பச்சன் முடிவு செய்துள்ளார்என்கிறார்கள். இதனால் ஜெய்ப்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க அரண்மனையில்திருமணத்தை நடத்த அவர்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாள் அபிஷேக் ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர்சென்றார். அப்போது மகாராணி பத்மா தேவியை அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.திருமணம் தொடர்பாகவே அவர் பேசியதாக கூறப்படுகிறது.

ஜெய்ப்பூரில் திருமணத்தை முடித்து விட்டு உதய்ப்பூர் அரண்மனையில் வரவேற்பைவைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.

ஆனால் பாதுகாப்பு கருதி மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலிலேயேதிருமணத்தை முடித்து விடவும் வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே, ஐஸ்வர்யாவின் முகூர்த்தப் புடவைக்காக, ரூ. 5 லட்சம் மதிப்புள்ளபனாரஸ் பட்டுப் புடவையை ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்துள்ளனராம்.வாரணாசியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இதற்கான ஆர்டர் தரப்பட்டுள்ளது.

இதுதவிர அமிதாப் பச்சன் குடும்பப் பெண்மணிகள் கல்யாணத்தன்று கட்டிக்கொள்வதற்காக அதே இடத்தில் தலா ரூ. 1 லட்சம் மதிப்பு கொண்ட 21 பட்டுச்சேலைகளுக்கும் ஆர்டர் தரப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil