»   »  பிப். 7ல் ஐஸ்-அபி கல்யாணம்?

பிப். 7ல் ஐஸ்-அபி கல்யாணம்?

Subscribe to Oneindia Tamil

ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல்யாணம் நடக்கப் போவதாகசெய்தி கிளம்பியுள்ளது.

ஆள் பல மாறி, கடைசியில் அபிஷேக்குடன் செட்டிலாகும் நிலைக்கு வந்துள்ள ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கைகைப்பிடிப்பதற்குள் அல்லோகல்லப் பட்டுப் போய் விடுவார் போல. அவ்வளவு குழப்பமாக இருக்கிறதுஇவர்களின் கல்யாண மேட்டர்.

இருவரும் கல்யாணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் முதலில் ஒப்புக் கொண்டனராம். ஆனால் ஐஸ்வர்யா,அபிஷேக் ஜாதகங்களை பெங்களூரில் உள்ள தங்களது ஆஸ்தான ஜோதிடரம் அமிதாப்பச்சன் குடும்பத்தினர்காட்டப் போக அவர் சில பிரச்சினைகளை கூறியுள்ளார்.

இருவரும் கல்யாணம் செய்து கொண்டால் அபிஷேக்கின் திரையுலக வாழ்க்கை பிரச்சினைக்குரியதாக இருக்கும்என்பது அதில் முக்கியமானது. இதனால் குழப்பத்தில் ஆழ்ந்தது அமிதாப் குடும்பம். இதனால் கல்யாணப்பேச்சுக்கள் அடுத்த கட்டத்திற்குப் போகாமல் அப்படியே நிற்கின்றன.

ஆனால் அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் அடுத்தடுத்த கட்டத்திற்குப் போய்க் கொண்டுள்ளனர். இருவரும் பல்வேறுஇடங்களுக்கும் ஜோடியாகவே சென்று வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் குறித்த பரபரப்பான வதந்தி கிளம்பியது. மதுரைக்கு திடீர் விஜயம் செய்த இருவரும்மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக அந்த செய்தி கூறியது.

இப்போது வேறு மாதிரியான செய்திகள் கிளம்பியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருவரும்மாலை மாற்றிக் கொண்டதாக இந்த செய்தி கூறுகிறது. மேலும் வெளிநிாடு ஒன்றில் வைத்து இருவரும் மோதிரம்மாற்றிக் கொண்டதாகவும் கூடுதல் டென்ஷனைக் கொடுக்கிறது அந்த செய்தி.

இப்படி ஐஸ், அபியை வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சகட்டு மேனிக்குக் கிளம்பிக் கொண்டுள்ள நிலையில்டெல்லி இதழ் ஒன்று புதுச் செய்தியை பரப்பி விட்டுள்ளது.

அதாவது ஐஸ், அபி கல்யாணத்திற்கு அமிதாப் குடும்பம் பூரணமாக சம்மதம் கொடுத்து விட்டதாம். அடுத்தஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி இருவருக்கும் கல்யாணம் என்பதுதான் அந்த செய்தி.

இந்த செய்தியாவது உண்மையாகுமா அல்லது புஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இன்று ஐஸ்வர்யாவுக்குப் பிறந்த நாள். எனவே ஐஸ்வர்யா வாயால் ஏதாவது மேட்டர் வெளிவரலாம் எனபேப்பரும், பேனாவுமாக செய்தியாளர்கள் கூட்டம் ஆவலோடு காத்துக் கொண்டுள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil