ஐஸ்வர்யா- ஓபராய் காதல் ஓவர் நடிகை ஐஸ்வர்யா ராய்- விவேக் ஓபராய் இடையிலான காதல் முறிந்துவிட்டதாக அரசல் புரசல் செய்திகள் தான் வந்துகொண்டிருந்தன. இப்போது அது கண்பர்ம் ஆகிவிட்டது.முதலில் சல்மான் கானாலும் பின்னர் ஓபராயாலும் கதலிக்கப்பட்டவர் ஐஸ். சல்மானுடன் கொஞ்ச நாள் மட்டும் சுற்றிவிட்டு பின்னர்அவரிடமிருந்து ஒதுங்கிய ஐஸ்சுக்கு அழகிய காதலனாய் வந்து சேர்ந்தார் விவேக்.அவரைத் தீவிரமாக காதலித்து வந்தார் ஐஸ்வர்யா ராய். அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள்வெளியாகின.இத்தனைக்கு ஐஸ்சை விட விவேக் ஒபராய் இளையவர் (வயது 29 தான்). காதலுக்கு கண்ணில்லை வயசுமில்லை என்பது போல்இவர்கள் காதல் தீவிரமடைந்தது. ஆனால் ஐஸ்சின் அம்மாவிற்கு இவர்கள் காதல் விவகாரம் பிடிக்கவில்லை.இருந்தாலும் மகள் ஆசைப்பட்டுவிட்டாலே என்பதற்காக அவர்களது திருமணத்தை உடனே நடத்திவிட வேண்டும் என்றுஆசைப்பட்டார். ஆனால் ஓபராய் பட உலகில் தனக்கென ஒரு இமேஜ் கிடைத்த பிறகு தான் கல்யாணம் என்று ஜகா வாங்கிவந்தார். இதனால் ஐஸ்சின் அம்மா அப்செட்.மேலும் திருமணத்திற்கு முன்பே தங்களது காதலை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஓபராய் கூறியதை ஐஸ்வர்யா ராய்ஏற்கவில்லையாம். (இதே போல் தான் சல்மான் கானும் கூறினார். இதையடுத்துத் தான் அவருக்கு ஐஸ் கல்தா கொடுத்தார்).இந்த நிலையில் தான் தனது மகளுக்கு புகையைப் போட்டு விவேக்கிடம் இருந்து தூரமாக்கிவிட்டாராம்.கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடந்த நண்பர் ஒருவர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கைகோர்த்தபடி ஐஸ்சும்-ஓபராயும் மிகநெருக்கமாக கலந்து கொண்டனர்.அது தான் அவர்களின் காதலுக்கு டாட்டா காட்டிய கடைசி நிகழ்ச்சி. இதற்கு பிறகு ஐஸ்க்கும், ஓபராய்க்கும் இடையேதேவையில்லாமல் லடாய்கள் ஆரம்பித்தன. இதனிடையே ஐஸ் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார்.இங்கே தேவதாஸ் போல் நம்ம ஓபராய் நண்பர்களிடம், ஐஸ் பகிரங்கமாக தமது காதலை அறிவிக்காதது பற்றி கூறிஆதங்கப்பட்டு கொண்டிருந்தார். அதன் பிறகு ஓபராயும், ஐஸ்வர்யாவும் நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். எல்லா விஷயத்திலும், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதால் திருமணம் செய்து கொண்டு அதற்கு பிறகுபிரிவதை விட இப்போதே காதலை முறித்துக் கொண்டு நண்பர்களாக பிரிந்து விடுவது நல்லது என்று தீர்மானித்துவிட்டார்களாம்.இதனால் காதலுக்கு பை பை சொல்லிவிட்டார்களாம்.காதலியை கைபிடிக்கும் அமீர் கான்: திருமணம், டைவர்ஸ் எல்லாம் சினிமாவை பொறுத்தவரை சாதாரணம் என்றால் மும்பை படவுலகில் சர்வ சாதாரணம்.இப்ப இந்த லிஸ்டில் இந்தி நடிகர் அமீர் கானும் சேர்ந்துள்ளார். ஏற்கனவே தமது மனைவியை விவகாரத்து செய்த அவர் இப்பதனது காதலியைக் கைபிடிக்கவுள்ளார்.ரீனாவை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அமீர்கானுக்கு 2 குழந்தைகள். இந் நிலையில் கருத்து வேறுபாடுகாரணமாக அமீரை விட்டுப் பிரிந்தார் மனைவி ரீனா. பிறகு இருவரும் சட்டப்படி விவகாரத்து பெற்றனர். இதனையடுத்து தனியே தவித்த அமீர், லகான் படப்பிடிப்பில் உதவி டைரக்டராக இருந்த கிரண் ராவ் என்ற பெண்ணை மடக்கிவிட்டார். இவர்கள் காதல் முற்றியது. பிறகு என்ன ஜோடி போட்டு ஊரை சுற்றினர். சினிமா விழாக்கள் எல்லாவற்றிலும் கிரணோடு தான் அமீர் ஆஜர் ஆகி வருகிறார். பொது இடத்தில் இப்படி நெருக்கமாயிருந்தசமாச்சாரத்தால் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மும்பை படவுலகில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது அமீர்கான்-கிரண் ராவ் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து ஜனவரி 1ம் தேதி திருமணத்தை நடத்தப்போவதாக கூறியுள்ளனர். மும்பையில் இருந்து 250 கிமீ தூரத்தில் இருக்கும் பாஞ்சனி என்ற இடத்தில் இந்தத் திருமணம்நடக்கவுள்ளதாம்.ஜனவரி 1ம் தேதி நடக்கவுள்ள இந்த திருமணத்தில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதால் அவர்களுக்காக இப்போதேபாஞ்சனியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள அனைத்து ரூம்களையும் புக் செய்துவிட்டாராம் அமீர்.

By Staff

நடிகை ஐஸ்வர்யா ராய்- விவேக் ஓபராய் இடையிலான காதல் முறிந்துவிட்டதாக அரசல் புரசல் செய்திகள் தான் வந்துகொண்டிருந்தன. இப்போது அது கண்பர்ம் ஆகிவிட்டது.

முதலில் சல்மான் கானாலும் பின்னர் ஓபராயாலும் கதலிக்கப்பட்டவர் ஐஸ். சல்மானுடன் கொஞ்ச நாள் மட்டும் சுற்றிவிட்டு பின்னர்அவரிடமிருந்து ஒதுங்கிய ஐஸ்சுக்கு அழகிய காதலனாய் வந்து சேர்ந்தார் விவேக்.

அவரைத் தீவிரமாக காதலித்து வந்தார் ஐஸ்வர்யா ராய். அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள்வெளியாகின.

இத்தனைக்கு ஐஸ்சை விட விவேக் ஒபராய் இளையவர் (வயது 29 தான்). காதலுக்கு கண்ணில்லை வயசுமில்லை என்பது போல்இவர்கள் காதல் தீவிரமடைந்தது. ஆனால் ஐஸ்சின் அம்மாவிற்கு இவர்கள் காதல் விவகாரம் பிடிக்கவில்லை.

இருந்தாலும் மகள் ஆசைப்பட்டுவிட்டாலே என்பதற்காக அவர்களது திருமணத்தை உடனே நடத்திவிட வேண்டும் என்றுஆசைப்பட்டார். ஆனால் ஓபராய் பட உலகில் தனக்கென ஒரு இமேஜ் கிடைத்த பிறகு தான் கல்யாணம் என்று ஜகா வாங்கிவந்தார். இதனால் ஐஸ்சின் அம்மா அப்செட்.


மேலும் திருமணத்திற்கு முன்பே தங்களது காதலை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஓபராய் கூறியதை ஐஸ்வர்யா ராய்ஏற்கவில்லையாம். (இதே போல் தான் சல்மான் கானும் கூறினார். இதையடுத்துத் தான் அவருக்கு ஐஸ் கல்தா கொடுத்தார்).

இந்த நிலையில் தான் தனது மகளுக்கு புகையைப் போட்டு விவேக்கிடம் இருந்து தூரமாக்கிவிட்டாராம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடந்த நண்பர் ஒருவர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கைகோர்த்தபடி ஐஸ்சும்-ஓபராயும் மிகநெருக்கமாக கலந்து கொண்டனர்.

அது தான் அவர்களின் காதலுக்கு டாட்டா காட்டிய கடைசி நிகழ்ச்சி. இதற்கு பிறகு ஐஸ்க்கும், ஓபராய்க்கும் இடையேதேவையில்லாமல் லடாய்கள் ஆரம்பித்தன. இதனிடையே ஐஸ் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார்.

இங்கே தேவதாஸ் போல் நம்ம ஓபராய் நண்பர்களிடம், ஐஸ் பகிரங்கமாக தமது காதலை அறிவிக்காதது பற்றி கூறிஆதங்கப்பட்டு கொண்டிருந்தார். அதன் பிறகு ஓபராயும், ஐஸ்வர்யாவும் நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

எல்லா விஷயத்திலும், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதால் திருமணம் செய்து கொண்டு அதற்கு பிறகுபிரிவதை விட இப்போதே காதலை முறித்துக் கொண்டு நண்பர்களாக பிரிந்து விடுவது நல்லது என்று தீர்மானித்துவிட்டார்களாம்.

இதனால் காதலுக்கு பை பை சொல்லிவிட்டார்களாம்.

காதலியை கைபிடிக்கும் அமீர் கான்:


திருமணம், டைவர்ஸ் எல்லாம் சினிமாவை பொறுத்தவரை சாதாரணம் என்றால் மும்பை படவுலகில் சர்வ சாதாரணம்.

இப்ப இந்த லிஸ்டில் இந்தி நடிகர் அமீர் கானும் சேர்ந்துள்ளார். ஏற்கனவே தமது மனைவியை விவகாரத்து செய்த அவர் இப்பதனது காதலியைக் கைபிடிக்கவுள்ளார்.

ரீனாவை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அமீர்கானுக்கு 2 குழந்தைகள். இந் நிலையில் கருத்து வேறுபாடுகாரணமாக அமீரை விட்டுப் பிரிந்தார் மனைவி ரீனா. பிறகு இருவரும் சட்டப்படி விவகாரத்து பெற்றனர்.

இதனையடுத்து தனியே தவித்த அமீர், லகான் படப்பிடிப்பில் உதவி டைரக்டராக இருந்த கிரண் ராவ் என்ற பெண்ணை மடக்கிவிட்டார். இவர்கள் காதல் முற்றியது. பிறகு என்ன ஜோடி போட்டு ஊரை சுற்றினர்.


சினிமா விழாக்கள் எல்லாவற்றிலும் கிரணோடு தான் அமீர் ஆஜர் ஆகி வருகிறார். பொது இடத்தில் இப்படி நெருக்கமாயிருந்தசமாச்சாரத்தால் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மும்பை படவுலகில் கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது அமீர்கான்-கிரண் ராவ் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து ஜனவரி 1ம் தேதி திருமணத்தை நடத்தப்போவதாக கூறியுள்ளனர். மும்பையில் இருந்து 250 கிமீ தூரத்தில் இருக்கும் பாஞ்சனி என்ற இடத்தில் இந்தத் திருமணம்நடக்கவுள்ளதாம்.

ஜனவரி 1ம் தேதி நடக்கவுள்ள இந்த திருமணத்தில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதால் அவர்களுக்காக இப்போதேபாஞ்சனியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள அனைத்து ரூம்களையும் புக் செய்துவிட்டாராம் அமீர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X