எல்லாம் என் குழந்தைகளுக்காகத் தான்... கண்ணீர் விடும் பப்ளி நடிகை!
Recommended Video

தன் 36 குழந்தைகளுக்காக கண்ணீர் விடும் பப்ளி நடிகை
பப்ளியாக இருந்து ஸ்லிம்மாக மாறிய நடிகைக்கு வாய்ப்புகள் குறைந்து வருகிறது. 'என் குழந்தைகளுக்கு தனி வீடு ஒன்று கட்டணும். அதுக்காகத்தான் நடிக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.
நடிகை வாய்ப்பில்லாததால் விளம்பரங்களில் அதிகம் நடிக்கிறார். அதிலும் சமீபத்தில் வந்த விளம்பரத்தில் அவர் அந்த அண்ணாச்சியுடன் டூயட் பாடுவது போலவே உருவாக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட நடிகையின் தோழிகள் நடிகையை ஏகத்துக்கும் கிண்டல் செய்கிறார்களாம்.

அவர்களுக்கும் பதில் அளிக்கும் வகையில்தான், "எல்லாம் என் குழந்தைகளுக்காக", என்று கூறியிருக்கிறார். நடிகை 36க்கு மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைத்து வைப்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல விஷயத்துக்காகத்தானேம்மா... கண்ணீர் விடாதீங்க!
Comments


Click it and Unblock the Notifications