கல்யாணமும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்: நடிகர் விரக்தி

By Siva

Recommended Video

திருமணமே வேண்டாம்- விரக்தியில் நடிகர்- வீடியோ

சென்னை: நடிகர் ஒருவர் திருமணமே வேண்டாம் என்று விரக்தியில் பேசுகிறாராம்.

தமிழ் சினிமாவின் ஹேன்ட்சம் ஹீரோக்களில் ஒருவர் அவர். நடிகர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக உள்ளது. பல நடிகைகளின் பெயர் அவருடன் சேர்ந்து அடிபட்டுள்ளது. ஆனால் அதில் ஒருவருக்கு கூட அவரை திருமணம் செய்யும் ஐடியா இல்லை.

அவரை திருமணம் செய்யத் துடிக்கும் ஒரு பெண்ணை அவர் கண்டுகொள்ளவில்லை.

பெற்றோர்

பெற்றோர்

நடிகரின் வாழ்வில் காதலிகள் வந்து போவதை பார்த்த பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவர்களும் மகனுக்காக தீவிரவமாக பெண் தேடினார்கள். ஆனால் ஒரு பெண் கூட கிடைக்கவில்லை. போகும் இடம் எல்லாம் நடிகரின் காதல் வாழ்க்கை பற்றி தான் பேசுகிறார்களாம்.

காதல்

காதல்

எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு நடிகையுடன் உங்கள் மகனின் பெயர் அடிபடுகிறது. அவருக்கு எப்படி பெண் தர முடியும் என்று பெண்ணை பெற்றவர்கள் கேட்கிறார்களாம். அப்படியே ஏதாவது பெண் வீட்டில் சம்மதம் தெரிவித்தாலும் அந்த பெண்ணை நம்ம நடிகருக்கு பிடிப்பது இல்லையாம். இதனால் அவரின் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.

வெறுப்பு

வெறுப்பு

நாங்கள் பார்க்கும் பெண்ணை எல்லாம் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழித்தால் எப்படி, சீக்கிரமாக திருமணம் செய்து கொள் என்று நடிகரை அவரது பெற்றோர் வற்புறுத்துகிறார்களாம். பெற்றோரின் வற்புறுத்தலால் கடுப்பான நடிகர் எனக்கு கல்யாணமும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம். நான் சிங்கிளாகவே இருந்துவிடுகிறேன் என்று சீறுகிறாராம்.

நடிகை

நடிகை

நடிகர் யாருடன் சேர்ந்து நடித்தாலும் உடனே அவர்களுக்கு இடையே தனிப்பட்ட முறையில் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிட்டது என்று செய்தி வெளியாகிவிடுகிறது. அடேங்கப்பா, அவர் லிஸ்ட்டில் பல நடிகைகளின் பெயர்கள் வந்தது. ஆனால் பாவம் எந்த காதலும் கை கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X