வாரிசு நடிகைக்கும் பெப்பே, தங்கச்சி நடிகைக்கும் பெப்பே காட்டிய நடிகர்
Recommended Video

சென்னை: ஹீரோ ஒருவர் இரண்டு நடிகைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.
தமிழ் திரையுலகின் உயர்ந்த நடிகர்களில் ஒருவர் அவர். அவரும் வாரிசு நடிகையும் காதலர்கள் என்று பல காலமாக கிசுகிசுக்கப்பட்டது. இடையில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாம்.
அந்த கேப்பில் நடிகருக்கு வேறு ஒரு நடிகை மீது காதல் வந்துவிட்டதாம்.

ஜோடி
வாரிசு நடிகையை பிரிந்த நடிகர் தங்கச்சி நடிகையுடன் ஊர் சுற்றினார். ஊர் எல்லாம் அடங்கிய பிறகு நடிகையை அழைத்துக் கொண்டு காரில் வலம் வந்தார். இப்படி சில மாதங்கள் தங்கச்சி நடிகையுடன் காதலில் இருந்தார் நடிகர்.

நடிகர்
தங்கச்சி நடிகையுடனான காதல் ஆரம்பித்த வேகத்தில் முடிந்துவிட்டது. நடிகர் மீண்டும் வாரிசு நடிகையிடம் சென்றுவிட்டார். இருவரும் பொது இடங்களில் நெருக்கமாக இருந்ததுடன் சமூக வலைதளங்களிலும் பப்ளிக்காக காதலை வளர்த்தனர்.

சர்பிரைஸ்
நடிகரும், வாரிசு நடிகையும் திருமணம் செய்வார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் படத்தில் வருவது போன்று நிஜத்திலும் டுவிஸ்ட் வைத்துவிட்டார் நடிகர். நடிகர் தொழில் அதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்யப் போகிறார். இது பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணம் என்று கருதப்பட்டது.

திருமணம்
திருமணம் தொழில் அதிபர் மகளுடனான திருமணம் காதல் திருமணமாம். இருவரும் சந்தித்து காதலை வளர்த்து பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் வாங்கியுள்ளனர். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. இந்த ஆண்டிலேயே திருமணம் நடைபெறுகிறது. இந்த பெண்ணுடன் எப்பொழுது காதல் ஏற்பட்டது என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











