தலைவன் தப்பிச்சான்: பிரபல நடிகரின் ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: நடிகை ஒருவரின் பேட்டியை பார்த்த ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அந்த நடிகர் தப்பித்தார் என்று நிம்மதி அடைந்துள்ளனர்.
பல திறமைகள் கொண்டவர் அந்த நடிகர். அவர் திறமைக்கு எங்கோ சென்றிருக்க வேண்டும். அவர் வாழ்வில் ஏதேதோ நடந்து தற்போது தான் ஒரு வழிக்கு வந்துள்ளார் நடிகர்.
நடிகருக்கும், காதலுக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தமாகவே உள்ளது.

காதல்
நடிகர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக உள்ளது. அவரே ஆசைப்பட்ட காதல் கூட முறிந்துவிட்டது. இருப்பினும் காதல் மீதான நம்பிக்கையை மட்டும் அவர் கைவிடவில்லை. நடிகர் ஒரு பிரபல நடிகையை காதலித்தார் என்று செய்திகள் வெளியாகின. அது குறித்து அறிந்த ரசிகர்களோ இந்த காதலாவது கல்யாணத்தில் முடிய வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

இமேஜ்
நடிகரும், நடிகையும் சீரியஸாக காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் அப்படி எதுவும் இல்லையாம். நடிகை செய்யும் சில, பல செய்கைகளால் அவரின் இமேஜ் தொடர்ந்து டேமேஜாகிக் கொண்டிருக்கிறது. அவரின் கெரியரும் படுத்து தூங்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் அவர் தனக்கு யாரும் தேவை இல்லை என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள்
நடிகை தெரிவித்தது குறித்து அறிந்த அந்த நடிகர்களின் ரசிகர்களோ நல்ல வேளை எங்க தலைவன் தப்பிச்சான் என்று சந்தோஷமாக உள்ளனர். இந்த நடிகையை நம்ம தலைவன் திருமணம் செய்திருந்தால் அவரின் வாழ்க்கை நாசமாக போயிருக்கும். எல்லாம் நன்மைக்கே என்கிறார்கள் ரசிகர்கள்.

திருமணம்
நடிகருக்கு திருமணம் செய்து வைத்து பேரன், பேத்தியை பார்க்க அவரின் பெற்றோருக்கு ஆசையாக உள்ளது. ஆனால் அந்த ஆசை மட்டும் நிறைவேறுவதாக தெரியவில்லை. அவர்கள் தங்கள் மகனுக்காக சில இடங்களில் பெண் தேடிப் பார்த்தும் பலனில்லை. நடிகர் இது எதையுமே கண்டுகொள்ளாமல் என் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











