»   »  ஆர்வக்கோளாறில் ரகசியத்தை உளறிய நடிகை: செம கடுப்பில் இயக்குனர்

ஆர்வக்கோளாறில் ரகசியத்தை உளறிய நடிகை: செம கடுப்பில் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்ச நடிகரின் புதிய படம் குறித்த முக்கிய தகவலை உளறிக் கொட்டி துரையம்மா நடிகை பிரமாண்ட இயக்குனரை மீண்டும் கடுப்பேற்றியுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் உச்ச நடிகரை வைத்து எடுத்து வரும் புதிய படத்தில் துரையம்மா நடிகை தான் ஹீரோயின். படம் துவங்கியதில் இருந்து துரையம்மா எதையாவது செய்து இயக்குனரை கடுப்பேற்றிக் கொண்டே இருக்கிறார்.

இடையில் ஜல்லிக்கட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தபோது பீட்டா அமைப்பில் இருந்து விலகுமாறு இயக்குனர் கூறியும் நடிகை கேட்கவில்லை. மேலும் அவ்வப்போது தன்னுடைய அரை நிர்வாண புகைப்படங்களை வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டு இயக்குனருக்கு பிபி எகிற வைத்தார்.

இது போதாது என்று அவ்வப்போது படத்தின் முக்கிய தகவல்களை உளறிக் கொட்டி வருகிறார் நடிகை. இந்நிலையில் முக்கிய காட்சி ஒன்றுக்காக நடிகர்களை அமெரிக்கா அழைத்துச் சென்று அங்கு செய்த ஒரு காரியத்தையும் உளறிவிட்டார் நடிகை.

நடிகையின் தொடர் சேட்டைகளால் இயக்குனர் கடுப்பின் உச்சத்தில் இருக்கிறாராம்.

English summary
A young actress has revealed a secret about her upcoming movie which has irked the director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil