காதலர் இருக்க உங்க ஜாய், எங்க ஜாய் இல்லை என்ஜாய் பண்ணும் நடிகை
Recommended Video

சென்னை: நடிகை ஒருவர் வாழ்க்கையை செமயாக என்ஜாய் செய்து வருகிறார்.
இளம் நடிகை ஒருவர் தன்னை தேடி பட வாய்ப்புகள் வந்தும் அதை எல்லாம் ஏற்பது இல்லை. இதை பார்த்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த பொண்ணு ஒத்து வராது என்று வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்யத் துவங்கிவிட்டனர்.
அம்மணி கையில் ஒன்று, இரண்டு படங்கள் தான் உள்ளன. அதுவும் பெரிய படங்கள் எல்லாம் கிடையாது.

பார்ட்டி
அம்மணிக்கு கெரியரை விட பார்ட்டிகள் மீது தான் கவனம் அதிகம். பார்ட்டி நடந்தால் அங்கு அந்த நடிகையை பார்க்கலாம் என்ற அளவுக்கு ஆகிவிட்டது. பார்ட்டி நடிகை என்று அவரை அழைக்கும் அளவுக்கு பார்ட்டிகளுக்கு சென்று என்ஜாய் பண்ணுகிறார். பார்ட்டிகளுக்கு செல்வது ஒரு குற்றமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

என்ஜாய்
சோறு போடும் நடிப்பு தொழிலை கண்டுகொள்ளாமல் பார்ட்டிகளுக்கு செல்வது தான் தவறு. அவர் தலையில் அவரே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார். இதில் சில நடிகர்களுடன் சேர்ந்து அவர் பெயர் அடிபடுகிறது. நேரத்திற்கு ஒருவருடன் அவர் பெயர் அடிபடுவது அவரின் ரசிகர்களையே வியக்க வைத்துள்ளது.

காதல்
நடிகையின் வாழ்வில் காதல் வந்தும் அவர் அதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளார். காதலர் இருக்கும்போதே செய்யக் கூடாத சில விஷயங்களை அவர் செய்கிறார். அதுவும் மற்றவர்களுக்கு தெரியும்படியே செய்கிறார். அவரின் கேரக்டரே புரியவில்லையே என்று கோலிவுட்காரர்கள் குழம்புகிறார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே
தனக்கு பிடித்த நபருடன் இருக்கிறார், பிடித்த விஷயங்களை செய்கிறார் நடிகை. அதை பிறர் தவறு என்று சொன்னாலும் காதில் வாங்குவது இல்லை. வாழ்க்கையை என்ஜாய் பண்ணுகிறார் அம்மணி. அவரின் போக்கு யாருக்குமே புரியவில்லை.


Click it and Unblock the Notifications











