போச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை
சென்னை: வெற்றிப் படத்தில் நடிக்காமல் போனது குறித்து நடிகை ஃபீல் பண்ணியுள்ளார்.
தமிழ், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை அவர். மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளவரின் பெரிய படத்தில் நடிக்க அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது.
அவரும் சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டார்.

விலகல்
படப்பிடிப்பு துவங்கிய பிறகு தான் பிற படங்களில் பிசியாக இருப்பதாகக் கூறி அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார். அவர் தமிழில் பிசியாக இருந்ததால் அவர் சொன்ன காரணத்தை ஏற்று படக்குழு தமிழ் பெண் ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைத்தது. பெரிதாக மார்க்கெட் இல்லாத அந்த நடிகை தனக்கு வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

வசூல்
அந்த ஹீரோ, தமிழ் பெண் நடித்த படம் சும்மா இல்லை பிரமாண்டமாக ரிலீஸானது. அது ரிலீஸான விதத்தை பார்த்தே பலரும் வியந்தனர். படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துவிட்டது. பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது படம். அதனால் வசூலில் நிச்சயம் புதிய சாதனை நிகழ்த்தும் என்று நம்பப்படுகிறது.

புலம்பல்
அந்த வெற்றிப் படத்தில் இருந்து வெளியேறிய நடிகை நடிப்பில் வெளியான படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் அந்த மலையாள படம் அளவுக்கு இல்லை. இதை பார்த்து நடிகை தேடி வந்த நல்ல வாய்ப்பை இப்படி வேண்டாம் என்று சொல்லிவிட்டேனே என தற்போது புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

மெகா ஹிட்
அவர் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் அவர் கெரியரின் மெகா ஹிட் படமாக அமைந்திருக்கும். பெரிய வெற்றியை பார்த்திராத அந்த தமிழ் நடிகைக்கு இந்த மலையாள படம் கை கொடுத்துள்ளது. வாய்ப்பை வீணடித்த வருத்தத்தில் தனியாக இருக்கும்போது புலம்பினாலும் வெளியே வரும் போது எனக்கு வருத்தம் எல்லாம் இல்லையே என்று நடிக்கிறாராம் அம்மணி. அவரை விடுங்க அவர் இடத்தில் யார் இருந்தாலும் புலம்பத்தான் செய்வார்கள்.


Click it and Unblock the Notifications











