பண கஷ்டம், வேறு வழியில் இல்லாமல் இறங்கி வந்த நடிகை
சென்னை: பிரபல இயக்குனரை விவாகரத்து செய்த ஸ்வீட் கடை நடிகை சிறு வேடமாக இருந்தாலும் கொடுங்க நடிக்கிறேன் என்று கூறும் அளவுக்கு வந்துவிட்டாராம்.
ஸ்வீட் கடை நடிகை பிரபல இயக்குனரை திருமணம் செய்து அவரை பிரிந்துவிட்டார். விவாகரத்திற்கு பிறகு அவர் இயக்குனரின் தம்பியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகைக்கு நடிக்க ஆசை இருந்தாலும் அவரின் மைத்துனரை நினைத்து எந்த இயக்குனரும் அவருக்கு வாய்ப்பு தர தயாராக இல்லை. மைத்துனரால் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை அறிந்த நடிகை இந்த விஷயத்தில் அவர் தலையிட மாட்டார் வாய்ப்பு தாங்க என்று கேட்டும் பலனில்லை.
தற்போது நடிகைக்கு பண கஷ்டமாக உள்ளதாம். அதனால் சிறு வேடமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாய்ப்பு கேட்கிறாராம். பலன் ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதில் பலனில்லை என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications










