உத்தம நடிகர் வெளியிட்ட பேமிலி போட்டோ.. தேவையில்லாமல் மாட்டிய நடிகை.. இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கல!
உத்தம நடிகர் ஒருவர் வெளியிட்ட குடும்ப புகைப்படம் காரணமாக இளம் நடிகை ஒருவர் தேவையில்லாத சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
சென்னை: உத்தம நடிகர் ஒருவர் வெளியிட்ட குடும்ப புகைப்படம் காரணமாக இளம் நடிகை ஒருவர் தேவையில்லாத சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
அந்த மூத்த நடிகர் சமீப நாட்களாக சரியாக சினிமா உலகில் கவனம் செலுத்துவதில்லை. சினிமாவில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் கூட சினிமா நடிகர்கள் நடிகைகள் பலருடன் தொடர்பில்தான் இருக்கிறார்.
ஏற்கனவே இரண்டிற்கும் மேற்பட்ட திருமணம் முறிந்து, பின் மூன்றாவதாக ஒரு பதிவு செய்யப்படாத திருமண வாழ்க்கையும் முறிந்து இவர் சில நாட்கள் தனியாக இருந்தார்.

புதிய வாழ்வு
இந்த நிலையில் பட ஷூட்டிங் ஒன்றின் மூலம் அறிமுகம் ஆன நடிகையுடன் தற்போது உத்தம நடிகர் தொடர்பில் இருக்கிறார். அவருடன்தான் தற்போது உத்தம நடிகர் வாழ்ந்து வருகிறார். இவர்கள் சில வாரங்கள் முன் வெளிநாடு பயணம் எல்லாம் சென்றனர்.

தெரியும்
இவர்கள் இருவரும் ஒன்றாக வசிப்பது சினிமா உலகில் பலருக்கும் தெரியும். இவர்கள் சென்னையிலேயே தனியாக ஒரு வீட்டில் தற்போது வசித்து வருகிறார்கள். உத்தம நடிகர் உடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அந்த நடிகையும் தற்போது நடிப்பு மீது கவனம் செலுத்துவதில்லை.

என்ன ஆனது
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அந்த உத்தம நடிகர் வெளியிட்ட குடும்ப புகைப்படத்தில் அந்த நடிகையும் உடன் இருந்தார். இந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரலானது. அட குடும்ப புகைப்படத்தில் இடம்பெறும் அளவிற்கு நெருக்கமாகிவிட்டாரா என்று பலரும் இதை ஷேர் செய்து கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால் என்ன
ஆனால் பல வாரங்கள் கழித்து தற்போது இந்த புகைப்படம் காரணமாக அந்த நடிகையின் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. நீ இப்படி பண்ணுவன்னு நினைக்கல. உத்தம நடிகர் உடன் சேர வேண்டாம் . அவர் இப்போதும் சினிமாவில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை. அவருடன் இருப்பது சரியாக இருக்காது.

குடும்பம் கோபம்
எதிர்காலம் மோசமாகிவிடும். உடனே அவரை விட்டு வெளியே வந்துவிடு. மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்து என்று அந்த நடிகைக்கு அவரின் பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அந்த நடிகையின் வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











