அதிரடி முடிவு எடுத்த பிரபல நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை
சென்னை: பிரபல நடிகரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் அழகான நடிகை ஒருவர் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
அழகான நடிகை ஒருவர் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார்.
அத்தகைய படங்களில் அவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் தயங்குகிறார்கள்.

திருமணம்
நடிகைக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள் அவரின் பெற்றோர். ஆனால் நடிகையோ திருமணத்தை தள்ளிப் போடுவதிலேயே குறியாக உள்ளார்.

சினிமா
தனக்கு வரும் கணவர் திரைத்துறையை சேர்ந்தவராக இருக்கக் கூடாது என்று நினைக்கிறாராம் நடிகை. நடிகை ஒரு பெரிய இடத்து நடிகரின் கட்டுப்பாட்டில் உள்ளார் என்று பல காலமாக பேசப்படும் நிலையில் அவர் சினிமாவை சேராத ஒருவரை திருமணம் செய்ய விரும்புகிறார்.

கதாபாத்திரம்
நடிகையை ஹீரோவை சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே ஒப்பந்தம் செய்கிறார்கள் இயக்குனர்கள். ஆனால் அவருக்கோ படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாக உள்ளதாம். அவரின் ஆசையை நிறைவேற்ற தான் ஆள் இல்லை.

நடிப்பு
நடிகைக்கு நடிப்பு வராததால் தான் ஹீரோவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் மட்டும் போடுகிறோம் இது புரியாமல் வெயிட்டான கதாபாத்திரம் கேட்டால் எப்படி என்று இயக்குனர்கள் புலம்புகிறார்கள். நடிகையின் ஆசையை பற்றி அறிந்தவர்கள் அவரின் அறியாமையை பார்த்து சிரிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











