இந்த நடிகையிடம், உங்களுக்கு நடிக்கவே தெரியலைன்னு எப்படி சொல்வது: சிரிக்கும் இயக்குனர்கள்
Recommended Video

சென்னை: ஒரு நடிகையிடம் உங்களுக்கு நடிக்க வரவில்லை என்று எப்படி சொல்வது என்று தெரியாமல் இயக்குனர்கள் சிரிக்கிறார்கள்.
அளவான உயரம், உயரத்திற்கேற்ற எடை கொண்ட கண்ணழகி நடிகை அவர். நடிக்க வந்து பல ஆண்டுகளாகிவிட்டது. இன்னும் சீனியர் ஹீரோக்கள் மற்றும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு பட வாய்ப்புகள் வருவதற்கு அவரின் பொறுமையான குணம் தான் முக்கிய காரணம்.

ஹீரோயின்
அம்மணி தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்தாலும் படத்தில் அவருக்கு பெரிதாக வேலை இருக்காது. ஹீரோக்களுடன் டூயட் பாடிவிட்டு ஓரமாக இருக்கும் கதாபாத்திரங்கள் தான் அவரை தேடி வந்தது, வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவருக்கு சர்ச்சை நடிகை போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை.

நடிகை
மரத்தை சுற்றி சுற்றி டான்ஸ் ஆடுவதோடு முடிந்து போகும் கதாபாத்திரங்கள் மட்டுமே தன்னை தேடி வருவதால் நடிகை கடுப்பாகியுள்ளாராம். அவருக்கு நடிக்க வரவில்லை என்று தான் அத்தகைய கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க வைக்கிறார்கள் இயக்குனர்கள். பாவம், இது புரியாமல் அவர் தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க பிடிக்கவில்லை என்கிறார்.

இயக்குனர்கள்
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க பிடிக்கவில்லை, வெயிட்டான ரோல் வேண்டும் என்று நடிகை கேட்பதை பார்த்து இயக்குனர்கள் சிரிக்கிறார்களாம். நடிக்க வந்தால் வெயிட்டான ரோல் கொடுக்க மாட்டோமா, நமக்கு தான் நடிக்கவே வராதே என்று அவருக்கு பின்னால் பேசி சிரிக்கிறார்களாம். பாவம், இது எல்லாம் புரியாமல் நடிகை பெரிய கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

பொறுமை
ஆள் அழகாக இருக்கிறார், கிளாமர் காட்ட முகம் சுளிப்பது இல்லை, ஹீரோ- இயக்குனர் ஆகியோர் படப்பிடிப்புக்கு லேட்டாக வந்தாலும் கோபப்படுவது இல்லை என்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது. மேலும் அவரை ஹீரோயினாக போடுமாறு ஒரு பெரிய வீட்டுப் பிள்ளையும் இயக்குனர்களிடம் சிபாரிசு செய்கிறாராம்.


Click it and Unblock the Notifications











