#MeTooவா, அப்படின்னா?: பிளேட்டை மாற்றிய நடிகை
சென்னை: நடிகையை வாயை மூட வைக்க போட்ட பிளான் ஒர்க்அவுட் ஆகிவிட்டது.
பாலிவுட்டில் மீ டூ புகார் எழுவதற்கு முன்பே அது குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் அந்த நடிகை. பெரிய இடத்து பையன் மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன் ஆதாரங்களையும் வெளியிட்டார்.
சில பெரிய ஆட்கள் மீதும் பாலியல் புகார் தெரிவித்து ரசிகர்களை வியக்க வைத்தவர் அந்த நடிகை.

மோசம்
ஒரு கோலிவுட் ஹீரோ மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன் அவர் பற்றி ஒரு கேவலமான விஷயத்தை வெளியிட்டார். நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறொன்றும் இல்லை என்றார். மேலும் ஒரு பல திறமை கொண்ட பிரபலம், இயக்குனர் மீதும் புகார் தெரிவித்தார் அம்மணி.

புயல்
கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பப் போவதாக நடிகை தெரிவித்தார். மேலும் சில நடிகைகளின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றப் போவதாகவும் கூறினார். இந்நிலையில் தான் அவர் பாலியல் புகார்கள், லீலைகளை வெளியிடுவதை அடியோடு நிறுத்திவிட்டார். அதற்கு காரணம் உள்ளது.

நடிகை
நடிகை வேலை இல்லாமல் சும்மா இருப்பதால் தானே அடுத்தவர்களின் லீலைகளை வெளியிடுகிறார் என்று அவருக்கு பட வாய்ப்புகள் அளித்துள்ளனர். அதனால் அவர் பட வேலைகளில் பிசியாகிவிட்டார். கெரியர் சூடுபிடித்துள்ளதால் மீ டூ பற்றி மறந்துவிட்டு நடிப்பு, நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆதரவு
நடிகை தங்க சொகுசு பங்களா, ஊர் சுற்ற கார், பிசியாக இருக்க படங்கள் என்று அவர் கவனத்தை மீ டூ வில் இருந்து திசை திருப்பியது ஒரு பெரிய இடத்து பிரபலமாம். அவர் செய்த காரியம் சூப்பராக ஒர்க்அவுட் ஆகிவிட்டது. நடிகை மீ டூவை எல்லாம் மறந்து நாட்களாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











