திருமணத்திற்கு வற்புறுத்தும் காதலர்: கண்டுக்காம இருக்கும் நடிகை

By Siva

Recommended Video

திருமணத்திற்கு வற்புறுத்தும் இயக்குனர்.. பிடிக்குடுக்காத நம்பர் நாயகி- வீடியோ

சென்னை: நடிகை ஒருவரின் திருமணம் தள்ளிப் போவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். கோடிகளில் சம்பளம் வாங்கும் அவருக்கு ஹீரோக்களுக்கு இணையான மார்க்கெட் உள்ளது. அதனால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

அவரும் இளம் இயக்குனர் ஒருவரும் காதலித்து வருகிறார்கள்.

காதலர்

காதலர்

நடிகையும், காதலரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். அவர்களின் திருமணம் இந்த ஆண்டு நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இதுவரை நடக்கவில்லை. இந்த ஆண்டும் முடியப் போகிறது. ஒரு வேளை அடுத்த ஆண்டு நடக்குமோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

வேண்டுகோள்

வேண்டுகோள்

நடிகையை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரின் ரசிகர்கள் அந்த இயக்குனருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இயக்குனரோ ஊர், உலகத்தில் உள்ளவர்களை எல்லாம் பாராட்டி ட்வீட் போடுகிறாரே தவிர ரசிகர்களின் கோரிக்கையை கண்டும் காணாதது போன்று உள்ளார்.

நடிகை

நடிகை

உடனே திருமணம் செய்து கொள்ளலாம் என்று இயக்குனர் தனது காதலியிடம் அடிக்கடி கூறுகிறாராம். அவர் தொடர்ந்து வலியுறுத்தியும் நடிகை தான் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆக, திருமணம் தள்ளிப் போவதற்கு இயக்குனர் காரணம் இல்லையாம்.

கவலை

கவலை

நடிகையின் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக இருந்த நிலையில் இந்த காதலாவது திருமணத்தில் முடிய வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பம். ஆனால் திருமதி ஆவதில் ஆசை இல்லாமல் இருக்கிறாராம் நடிகை. அவரின் கேரக்டரையே புரிந்து கொள்ள முடியவில்லையே. சரி, அது அவர் வாழ்க்கை, அவர் இஷ்டம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X