மசியாத நடிகர்: நடிகை போட்ட கணக்கு இப்படி தப்புக் கணக்காகிவிட்டதே
சென்னை: நடிகை ஒருவர் கணக்கு போட்டு செயல்பட அது நடக்காமல் போய்விட்டது.
அழகும், திறமையும் வாய்ந்தவர் அந்த நடிகை. அவர் ஒரு பிரபல இயக்குநரை காதலித்து வருகிறார். தனது காதலரை ஹீரோவாக்கும் ஐடியாவில் உள்ளார் நடிகை.

இதற்கிடையே கோட் நடிகரை தனது காதலரின் இயக்கத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் நடிகை. இதையடுத்து தான் தனது கொள்கைகளை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு கோட் நடிகரின் படத்தில் நடித்தார்.
நடிகரிடம் பேசி தனது காதலருக்கு டேட்ஸ் வாங்கிக் கொடுக்க நினைத்தார். ஆனால் கோட் நடிகர் மசியவில்லை. முன்னதாக நடிகை பரிந்துரை செய்து தான் முன்னணி நடிகர் ஒருவர் அவரின் காதலரின் இயக்கத்தில் நடித்தார்.
அந்த நடிகர் ஒப்புக் கொண்டது போன்று கோட் நடிகரும் சரி என்று சொல்வார் என நடிகை நினைத்தது தவறாகிவிட்டது. கோட் நடிகர் தற்போதைக்கு ஃப்ரீயாக இல்லை.
அவர் அடுத்தடுத்து படங்களில் வேறு இயக்குநர்களுடன் வேலை செய்ய திட்டமிட்டுள்ளார். கோட் நடிகர் விஷயத்தில் மட்டும் நடிகையின் கணக்கு தப்புக் கணக்காகிவிட்டது.


Click it and Unblock the Notifications











