கெஞ்சிய காதலி: பிளேட்டை மாற்றிய வாரிசு நடிகர்
Recommended Video

சென்னை: நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று திறமையான நடிகை பற்றி வாரிசு நடிகர் கூறி வருவதற்கு என்ன காரணம் என்று தெரிய வந்துள்ளது.
வாரிசு நடிகர் ஒருவரும், திறமையான நடிகையும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. இடையில் பிரிந்திருந்த அவர்கள் மீண்டும் சேர்ந்துவிட்டனர். இந்நிலையில் இருவரும் சொல்லி வைத்தது போன்று ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள்.

அதாவது எங்களுக்கு இடையே காதல் எல்லாம் இல்லை, நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று இருவரும் தனித்தனியாக பேட்டி அளித்தனர். நடிகருடன் காதல் என்பதால் தனக்கு பட வாய்ப்புகள் வருவது பாதிக்கும் என்று நடிகை அஞ்சுகிறாராம்.
இந்த காரணத்தால் தன்னை காதலி அல்ல தோழி என்று கூறுமாறு நடிகரிடம் அன்பு கோரிக்கை விடுத்தாராம். அதன் பிறகே நடிகர் அந்த நடிகையுடன் நட்பு மட்டுமே என்று கூறி வருகிறாராம்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்வதாக கூறப்பட்ட நிலையில் இப்படி நட்பு மட்டுமே என்று கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











