அய்யய்யோ செல்ஃபி பைத்தியம்: தளபதி பட நடிகையை பார்த்து தெறித்து ஓடும் பிரபலங்கள்
மும்பை: மார்க்கெட் இல்லாத நடிகையை பார்த்தால் பாலிவுட்காரர்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.
மூன்றெழுத்து நடிகை பாலிவுட்டில் அறிமுகமான படம் பல விருதுகளை அள்ளிக் குவித்தது. அதன் பிறகு பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் தளபதி நடிகருடன் நடித்தார். தற்போது அவருக்கு மார்க்கெட் சுத்தமாக இல்லை. இந்நிலையில் அம்மணி பார்ட்டிகளுக்கு சென்று பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை ஒரு வேலையாகவே வைத்துள்ளார்.
நடிகையை பார்ட்டிகளில் பார்த்தால் அய்யய்யோ செல்ஃபி பைத்தியம் என்று பாலிவுட்காரர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்களாம். நீங்கள் ஓடினால் மட்டும் விட்டுடுவேனா என்று வம்படியாக பிடித்து செல்ஃபி எடுக்கிறாராம்.
செல்ஃபி எடுப்பது விளம்பரம் தேடவே. அப்படியாவது யாராவது வாய்ப்பு தர மாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார் நடிகை.


Click it and Unblock the Notifications











