அக்கா, ஆன்ட்டினு தெறித்து ஓடும் இளம் ஹீரோக்கள்: ஒரு ஹீரோயினின் பரிதாப நிலை

By Siva

சென்னை: உயர்ந்த நடிகை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறதாம்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் உயர்ந்த நடிகை. ஒரு படத்திற்காக எடையை கூட்டிவிட்டு அதை குறைக்க முடியாமல் பாவம் அல்லாடி வருகிறார். அவர் நடிப்பில் தமிழில் வெளியான ஒரு படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை ஆன்ட்டி என்று கிண்டல் செய்தனர்.

இந்த தகவல் அவர் காதுகளை எட்ட தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

ஹீரோயின்

ஹீரோயின்

தெலுங்கிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரின் அசத்தல் நடிப்புக்காக படங்களும் ஓடுகிறது. அவர் அத்தகைய படங்களை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணம் இருக்கிறதாம். அந்த காரணம் இளம் ஹீரோக்கள் என்று கூறப்படுகிறது.

வயது

வயது

நடிகை உயரத்திற்கேற்ற வெயிட்டுடன் ஆஜானுபாகுவாய் இருக்கிறார். அவருடன் நடித்தால் அவரின் தம்பி போன்று தெரிவோம். அவர் ஆன்ட்டி போன்று இருக்கிறார் என்று இளம் ஹீரோக்கள் பயப்படுகிறார்களாம். அப்படி ஒன்றும் யாரும் கஷ்டப்பட்டு என்னுடன் நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறாராம்.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

நடிகைக்கு வயது ஏறிக் கொண்டே செல்வதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்புகிறார்கள். ஆனால் அவருக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் அவர்கள் கோவில், கோவிலாக சென்று வருகிறார்கள். இதற்கிடையே நடிப்புக்கு குட்டி பிரேக் விட்டிருந்த நடிகை புதுப்படங்களுக்கு கதை கேட்க ஆரம்பித்துவிட்டார் என்று கூறப்பட்டது.

நடிகை

நடிகை

நடிகை இனி படங்களில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு விரைவில் திருமணம் என்றும் நேற்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாக பரவியது. நடிகையின் திருமணம் பற்றி அவ்வப்போது இப்படி ஏதாவது தகவல் பரவுகிறது. அவர் நிஜமாகவே சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா என்பதை அவர் தான் உறுதிபடுத்த வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X